அதிகாரத் தரகர் வித்தியாதரனின் போராளிகளை இணைக்கும் புதிய கட்சியின் பின்புலம்

420

 

ராஜபக்சவின் சர்வதேச முகவராகச் செயற்பட்ட ராஜித சேனரத்னவுடன் வித்தியாதரன்(2007)
ராஜபக்சவின் சர்வதேச முகவராகச் செயற்பட்ட ராஜித சேனரத்னவுடன் வித்தியாதரன்(2007)

இலங்கையில் ஊடகத்துறையில் பல வருடங்களாகச் செயற்படுபவரும் அதிகாரத் தரகருமான வித்தியாதரன் புதிய கட்சி ஒன்றை ஆரம்பிக்கிறார். முன்னை நாள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை இணைத்துக்கொண்டு இக் கட்சியை ஆரம்பிப்பதாகத் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் இலங்கையில் அழிக்கப்படுவதற்குச் சற்று முற்பட்ட காலப்பகுதிகளில் கொழும்பில் இலங்கை அரசிற்கும் புலிகளுக்கும் இடையேயான அதிகாரத் தரகராகச் செயற்பட்ட வித்தியாதரன், மகிந்த ராஜபக்சவின் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒருவராகவிருந்தார்.

உதயன் பத்திரிகையில் ஆசிரியராகக் கடமையாற்றிய வித்தியாதரன் புலிகளுடனான தொடர்பை தனது அதிகார தரகிற்கான துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தினார். இன்று புதிய துருப்புச் சீட்டு ஒன்றை அவர் திட்டமிட்டு ஆரம்பிக்க முற்படுவதின் மறுபக்கமே புதிய அரசியல் கட்சி.

கட்சி ஒன்றினுள் போராளிகளை இணைக்காவிட்டால் ஆயுதப் போராட்டத்தின் பால் அவர்கள் ஈர்க்கப்படும் அபாயம் காணபடுவதும் கட்சியை ஆரம்பிப்பதற்கான நோக்கங்களில் ஒன்று என வித்தியாதரன் குறிப்பிடுகிறார்.

மக்கள் தாமாகவே ஆயுதப் போராட்டத்தை விரும்புவதில்லை. அரசுகள் அப்பாவி மக்கள் மீது ஆயுத ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்து விடும் போது அதிலிருந்து தற்காத்துக் கொள்ளவே ஆயுதப் போராட்டங்கள் ஆரம்பமாகின்றன.

மக்கள் மீதான இராணுவ மற்றும் ஆயுதப்படைகளின் ஒடுக்குமுறை இன்னும் தொடரும் நிலையில் தற்காப்பு யுத்தத்திற்கான அரசியல் வெளி இலங்கையில் காணப்படுகிறது.. அதனைப் பலவீனப்படுத்தும் பேரினவாதிகள் மற்றும் அதிகார வர்க்கங்களின் திட்டமே வித்தியாதரனின் கட்சி என்பது வெளிப்படை.

வித்தியாதரனின் இரகசியம் அம்பலம்….

வித்தியாதரனின் இரகசியம் அம்பலம்….

ஊடகங்களை முடக்கும் ஜம்பவான் வித்தியாதரன் இலங்கையில் பல ஊடகங்கள் முடக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றன இவை யாவரம் அறிந்ததே, ஆனால் இன்று இலத்திரணியல் ஊடகங்கள் முடக்கப் படுகின்றன இவை பற்றி பலரும் அலட்டிக் கொள்வதில்லை, காரணம் அதனது உண்மை நிலமை புரிவதில்லை.

இவை பற்றி ஜனாதிபதியின் இன்றைய ஆலோசகர் A.H.M. அஸ்வர் கடந்த வருடம் 25.12.2014ம் திகதி இடம் பெற்ற நத்தார் நிகழ்வில் வெளிநாட்டு புலிகள் ஊடகங்களை கட்டுப்படுத்துவது சிரமத்திலும் சிரமம் நண்பன் வித்தியின் பல்லாண்டு ஊடக அனுபவத்தின் உதவியுடன் பல இணையங்களுக்கு இன்று ஆப்பு வைக்க முடிந்தது என கூறி சிரித்தார்.

இவ் விடயத்தை நான் வித்தியை சந்தித்த வேளை இப்படி நடக்கிறதாமே என்றேன் அவரும் சிரித்த படி ஒன்றும் கூறவில்லை, அதுவே சாட்சி அத்துடன் நான் கொழும்பில் வேலை செய்யும் போதே சில இணையங்களின் பெயர்களைக் கூறி வேலை செய்கிறதா… நான் நேரம் இல்லை என்றாலும் சிரமப் படுத்தி தகவல்களை பெற்று விடுவார்.  இவ் விடயத்தில் எனக்கு ஓரளவு அனுபவம் உள்ளதால் இன்று என்னத் தோன்றுகிறது எதற்காக என்னிம் இவற்றை கேட்டார் என…

இவரும் இவரது உறவுமுறை சரவனபவன் பாராளுமன்ற உறுப்பினரும் சண்டை போல் நடித்து இலங்கை ஊடகங்களை எல்லாம் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் என்பதில் கடும் தீவிரம் அத்துடன் இன்று இருவரும் பிரிந்தாலும் இருட்டினில் உறவு கொண்டாடுவது வழமை.

வெளிநாட்டில் இருந்து இயங்கும் அனைத்து இலத்திரணியல் ஊடகங்களையும் கட்டுப் படுத்தி தமது பத்திரிகை இணையத் தளங்களை பலரும் பாற்க செய்ய வேண்டும் என்பதே இவரது எதிர்பார்ப்பு.

பாதுகாப்பு அமைச்சின் செயலரின் உதவியுடன் இயங்கும் இவரது இணைய ஊடக மற்றும் அச்சக பயணத்தில் அரசின் முதலீடு அதிகளவானது

நண்பா வித்தி நான் யார் என புரிகிறதா..?? அன்மையில் யாழில் சந்தித்து கைலாகு கொடுத்த உண் நண்டபன்டா. என்ன செய்வது உண்மையை கூறுவதைத் தவிர வேறு வழியில்லை.

ஒட்டுக்குழு தலைவர் டக்ளசுக்கு முன்பாக மண்டியிட்ட வித்தியாதரன்!

கனடாவில் முளைத்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிதியின் கீழ் யாழ்ப்பாணத்தில் திறக்கப்பட்டுள்ள அதன் பிரச்சார இணையத்திற்கு சிறீலங்கா ஜனாதிபதி, ஒட்டுக்குழு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் உதயன் மற்றும் சுடரொளி பத்திரிகைகளின் ஆசிரியரும் வடக்கு முதலமைச்சர் கனவிலிருந்து தூக்கி வீசப்பட்டவருமான வித்தியாதரனிற்கு புத்துயிர்ப்பு வழங்கவே கூட்டமைப்பின் கனேடிய கிளை பெருமளவு நிதியினை அள்ளி வழங்கியுள்ளது.

நேற்று யாழில் இடம்பெற்ற இணையத்தள ஆரம்ப நிகழ்வில் பல்வேறு பத்திரிகையாளர்கள் அப்பாவிப் பொதுமக்களை படுகொலை செய்த டக்ளஸ் மற்றும் கொலைகளை வழிநடத்திய ஜெகன் எனப்படும் குகனேந்திரன் ஆகியோர் நேரில் வந்து வாழ்த்தி இனப்படுகொலையை நடத்திய மகிந்த ஆசீர்வதிக்க கூட்டமைப்பின் பிரச்சாரத்திற்கு இணையத்தளமென கூறப்பட்டால் அதன் உள்நோக்கம் பற்றி சந்தேகம் எழுந்துள்ளது.

இது தொடர்பாக முகப்புத்தகத்தில்….,

பரபரப்புக்குப் பஞ்சமேயில்லாத யாழ்ப்பாணத்து ஊடகப் பரப்பில் புதிதாக மலர்ந்திருக்கிறது இணையம். அதன் பிரதம ஆசிரியராக இருந்து வழிநடத்துபவர் முன்னாள் உதயன் பத்திரிகையின் ஆசிரியர். சீ.என்.வித்தியாதரன்.

ஏற்கனவே ஊடகத்துறையிலும், புதிதாக இப்போது தமிழ்த் தேசிய அரசியலிலும் சல சலப்புக்களுக்குக் காரணமாகிப் பேசப்பட்டு வந்தவர் வித்தியாதரன்.

இன்றைய திறப்பு விழாவுக்கு “கொலைகார” அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை அழைத்து மாலை மரியாதைகளை வழங்கி விட்டு டக்ளஸ் தனக்குத் தொலைபேசியில் வாழ்த்துச் சொன்னதாக செய்தி வெளியிட்டுத் துரோகிக்கு மகுடம் சூட்டிய செய்தியை இருட்டடிப்புச் செய்திருக்கிறார்.

இந்த அறிமுக நிகழ்வுக்காக மாவை சேனாதிராஜாவுடன் வந்திருந்த இவரது மைத்துனர் உதயன் சரவணபவன் டக்ளசைக் கண்டதும் வாசலோடு திரும்பிப் போய்விட்டார். ஏற்கனவே உதயன் பத்திரிகையிலிருந்து வித்தியாதரன் விலகிய விடயத்தில் சர்ச்சைக் குறைவில்லாமல் பேசப்பட்டு வருகிறது.

இவரது இணைய ஆரம்பம் அவரது பத்திரிகையில் செய்தியாகிமை இதமான மாற்றம் என்று மூத்த இதழியலாளர் Janakeswaran அவர்கள் முகநூலில் பதிவிட்டிருந்தார். அந்தளவுக்குப் பேசப் பட்ட விடயத்தைப் போட்டு உடைத்து விட்டார் வித்தியாதரன்.

கொழும்பில் வித்தியாதரன் கடத்தப்பட்ட சமயம் வெளியில் வந்ததில் இருந்து, உதயன் ஆசிரிய பீடத்திலிருந்து வித்தியாதரன் வெளியேறியமை உட்பட அத்தனையும் “றோ” வினால் அரங்கேற்றப்பட்ட நடகங்கள் என்பது ஊரறியாத விடங்கள்.

அத்துடன் அந்த இணையம் இன்று நேற்றுத் தொடங்கப்பட்டதல்ல 29.05.2012 இல் உருவாக்கப்பட்டது. இருப்பினும் பொருத்தமான சமயம் பார்த்து இன்று பதிவேற்றப்பட்டிருக்கிறது. ஜெனிவாவில் தமிழர்களுக்கான குரல் எழுப்பப்படும் வேளையில் திசை திருப்பலுக்காகத் திட்டமிட்டு உருக்காட்டப்பட்டிருக்கின்றது.

இன்றைய மற்றுமொரு விருந்தினரும், பலரையும் விழி திரும்பச் செய்திருக்கின்றது. அவர் வேறு யாருமல்ல இந்தியத் துணைத் தூதுவர் மகாலிங்கம் தான் அவர். ஏற்கனவே இந்திய உளவு அமைப்பான “றோ” வின் பரவலாக்கத்துக்கு அரும்பாடுபட்டமைக்காக அவருக்குப் பதவியுயர்வுடனான இடமாற்றம் வழங்கப்பட்டிருக்கின்றது.

இந்தியாவினால் தேடப்படும் குற்றவாளியான டக்ளசோடு இன்று மகாலிங்கம் தோளில் போட்டபடி வந்தமை வித்தியாதரனை வினாக் குறியாக மாற்றியிருக்கின்றது.

அவை அனைத்தின் அடிப்படையிலும், வித்தியாதரன் யாரால், என்ன நோக்கத்துக்காக, வழிநடத்தப்படுகிறார் என்பதைப் புடம் போட்டுக் காட்டுகின்றன.

ஏற்கனவே தமிழ்த் தேசிய அரசியலில் இவரை நுழைக்கும் முயற்சியில் புலம்பெயர் தமிழர்களின் புத்திசாலித் தனமான காய் நகர்த்தலினால் தோற்றுப் போய்விட்ட “றோ” இப்போது இவரை வைத்துப் புதிய வியூகம் ஒன்றினை வகுக்க முயற்சிக்கிறது.

இவர் ஆசிரியராக இருந்த காலத்தில், இவரது அலுவலகத்துக்குள் புகுந்து சுட்டும், எரித்தும், கொலைத் தாண்டவம் ஆடிய டக்ளசோடு புதிய கூட்டணி ஒன்றை அமைத்து அதனை வெளியில் காட்டாமல், புலத்தில் இருக்கும் தமிழர்களை வழிநடத்துவதற்கான முயற்சியாகவே இதனைப் பார்க்க வேண்டும்.

ஏற்கனவே பாராளுமன்றக் கதிரைக்கான கனவும், மாகாண சபைக்கான ஆசையும் நிறைவேறாத நிலையில், புதிய வியூகம் பற்றி விழிப்பாய் இருப்போம்…

VETE VETE-01

SHARE