அத்வைதா நடிக்கும் மாங்கா கறுப்பு வெள்ளையில் பாட்டு 

441




அத்வைதா படத்துக்கு கறுப்பு வெள்ளையில் பாடல் படமாகிறது.திரையுலகில் கறுப்பு வெள்ளை படங்களின் காலம் மலையேறிவிட்டது. தற்போது டிஜிட்டல் யுகம் நடக்கிறது. இந்நிலையில் மாங்கா என்ற படத்தில் 3 பாடல்கள் கறுப்பு வெள்ளையில் உருவாகிறது. பிரேம்ஜி, அத்வைதா ஜோடி. லீமா, இளவரசு, ரேகா, மனோபாலா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். விஞ்ஞானி ஒருவர் கண்டுபிடிக்கும் அதிசயங்கள் பலருக்கும் வினோதமாக தெரிகிறது.

ஒருமுறை அவர் பாகவதர் ஒருவரை சந்திக்கிறார். இருவருக்கும் இடையே நட்பு உண்டாகிறது. அது நிலைக்கிறதா என்பது கதை. ஆர்.எஸ்.ராஜா இயக்குகிறார். செல்வா.ஆர்.எஸ். ஒளிப்பதிவு. பிரேம்ஜி இசை. பி.சி.கே.சக்திவேல் தயாரிப்பு. இதன் ஷூட்டிங் சென்னை, கோவாவில் நடந்துள்ளது

 

SHARE