அவுஸ்திரேலியா அகதிகள் பிரகடனத்தை மீறிச்செயற்பட்டு வருகின்றது – சர்வதேச மன்னிப்புச்சபை

432

அவுஸ்திரேலிய அரசினால் இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்ட தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் மிக மோசமாகச் சித்திரவதை செய்யப்பட்ட சம்பவத்தை அவுஸ்திரேலிய செய்தித்தாள் ஒன்று அம்பலப்படுத்தியுள்ளது.

கடந்த மாதம் மட்டக்களப்பு கடற்பரப்பில் வைத்து இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டவர்களில் தமிழர்களே இவ்வாறு சித்திரவதை கொடுமைககுள்ளாக்கப்பட்டுள்ளனர் எனக் கூறப்படுகின்றது.

இவ்விடயம் தொடர்பில் குறிப்பிட்ட செய்தித்தாள் மேலும் தெரிவித்துள்ளவை:-

அவுஸ்திரேலிய அரசினால் இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்களில் தமிழர்கள் 4 பேரும் தனியாக பிரிக்கப்பட்டுள்ளனர்.

அதில் இருந்த தமிழர் ஒருவரின் முகத்தின் மீது அதிகாரி ஒருவர் தாக்கியதில் அந்த தமிழரின் முகத்திலிருந்து இரத்தம் கொட்டியது.

அதிகாரிகள் தொடர்ந்து அவரிடம் ஆவேசமாக கேள்வி கேட்டனர். “விடுதலைப் புலிகளுக்கு நீ பணம் கொடுத்தாயா? அவர்களை உனக்கு தெரியுமா?” – என கேட்டு தாக்கினர். காலால் உதைத்தனர்.

இன்னொருவர் தண்ணீர் போத்தலால் அவரது முகத்தில் அறைந்தார். தமிழர்களை பின்னர் ஓர் இடத்திற்கு கூட்டிச் சென்று வரிசையாக இருக்குமாறு உத்தரவிட்டனர். பின்னர் இன்னொரு இடத்திற்கு கூட்டி வந்தனர். அதன் பின்னர் தொடர்ந்து கேள்விகளை கேட்டனர்.

 

boat-sinks_eu130713

பாதிக்கபபட்டவர்கள் தங்களது வீட்டு முகவரியை தெரிவிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அதே நாளில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் தங்களது வீட்டுக் கதவை தட்டியதாக குறிப்பிட்டுள்ளனர்

காலியில் விசாரித்துக் கொண்டிருந்த அதிகாரிகளே இவ்வாறு தங்களது வீடுகளுக்கு வந்து அச்சுறுத்துவதாக தெரிவித்துள்ளார்

board-au

ஒவ்வொரு தமிழரும் புலி ஆதரவாளர்களோ எனச் சந்தேகிக்கப்படுகின்றனர்.பாதிக்கபபட்டவர்கள் தாங்கள் நாடு கடத்தப்பட்ட பின்னர் தங்களது பாதுகாப்பு நிலைமை மோசமாகியுள்ளது என தெரிவிக்கின்றனர். “

அது போன்று கடந்த 3 வருடங்களுக்கு முன் பலவந்தமாக நாடு கடத்தப்பட்டவர்களின் வழக்குகளும் இதுவரைக்கும் முடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

அவுஸ்திரேலியா அகதிகள் பிரகடனங்களுக்கு முரணான வகையில் செயற்பட்டு வருவதாக சர்வதேச மன்னிப்புச் சபை குற்றம் சுமத்தியுள்ளது.

புகலிடக் கோரிக்கையாளர்களின் உரிமைகளை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என சர்வதேச மன்னிப்புச் சபையின் புகலிடக் கோரிக்iகாயளர் விவகாரங்களுக்கான அவுஸ்திரேலிய இணைப்பாளர் கிரெமி மெக்ரிகொர் தெரிவித்துள்ளார்.

புகலிடக் கோரிக்கையாளர் படகுப் பயணிகள் திருப்பி அனுப்பி வைக்கப்படுவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல எனவும், இதன் மூலம் சர்வதேச ரீதியான அழுத்தங்களை
அபோட் அரசாங்கம் எதிர்நோக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புகலிடக் கோரிக்கையாளர்களின் புகலிடக் கோரிக்கை பரிசீலனை செய்யாது புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என
தெரிவித்துள்ளார்.

புகலிடக் கோரிக்கையாளர் தொடர்பிலான விவகாரங்கள் தொடர்பாக அவுஸ்திரேலிய மக்களுக்கு உண்மையான நிலைமைகளை வெளிப்படுத்தப்படுவதில்லை என அவர்
சுட்டிக்காட்டியுள்ளார்.

நவுரு தீவுகளில் அமைந்துள்ள புகலிடக் கோரிக்கையாளர் தடுப்பு முகாமின் நிலைமைகளை பார்வையிடுவதற்கு சர்வதேச மன்னிப்புச் சபைக்கு அனுமதி கிடைக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

 

SHARE