இணையக்குற்றங்கள் தொடர்பில் விழிப்பாக இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை!!

517

எனவே இணையத்தள பாவனை மற்றும் குறிப்பாக இ.வங்கி சேவைகளின் போது கவனமாக நடந்து கொள்ளுமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.

இணையத்தள பணமாற்றங்களின் போது மாற்று சிம் அட்டைகளை பயன்படுத்துவது சிறந்தது.

வங்கி ஒன்றின் இணையத்தை பயன்படுத்தும் போது குறித்த வங்கியின் இணைப்புக்கள் என்று வரும் ஏனைய இணைப்புக்களை தவிர்க்குமாறு பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன கோரிக்கை விடுத்துள்ளார்.

கணக்கு இலக்கங்கள் மற்றும் கடன் அட்டைகளின் கடவுச்சொற்கள் போன்றவற்றை கோரி வரும் மின்னஞ்சல்களுக்கு பதிலளிக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுள்ளார்.

அண்மைக் காலத்தில் மாத்திரம், குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு இணையக்குற்றங்களுடன் தொடர்புடைய சமூக வலைத்தளங்கள் தொடர்பில் 235 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE