உலக கிண்ண கால்பந்து போட்டி பிரேசிலில் கோலாகலமாக ஆரம்பமானது

598

உலக கிண்ண கால்பந்து போட்டி திருவிழா இன்று பிரேசில் நாட்டின் ரியோடிஜெனிரோ நகரில் கோலாகலமாக தொடங்குகிறது. பிரேசில் நாட்டில் தொடங்கும் உலகின் இரண்டாவது மிகப் பெரிய விளையாட்டு திருவிழாவான உலக கிண்ண கால்பந்து போட்டியில் 32 நாடுகள் பங்கேற்கும் இந்த போட்டியை நடத்த பிரேசில் அரசு பாரிய அளவு பணத்தினை செலவு செய்துள்ளது.

ரூ.3,450 கோடி பரிசு
இந்த உலக கிண்ண கால்பந்து போட்டியின் மொத்த பரிசு தொகை ரூ.3,450 கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளி தொடங்கி வைக்கிறார்:

இந்த போட்டியை முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்டு செயற்கை கால் பொருத்தியுள்ள பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஒருவர் தொடங்கி வைக்கிறார்.

பிரேசில்- குரோஷியா

இன்றைய முதல் போட்டியில் பிரேசில் அணியும், குரோஷியா அணியும் இந்திய நேரடிப்படி இரவு 1.30 மணிக்கு மோதுகின்றன.

கோல் லைன் தொழில்நுட்பம்

இந்த உலக கோப்பை கால்பந்து போட்டியில் முதல் முறையாக கோல் லைன் என்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. ஜெர்மனியின் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இந்த கருவி மூலம் எல்லை கோட்டை பந்து தாண்டியதா? இல்லையா? என்பதே நடுவர்கள் கண்டறியலாம். கோல் கம்பத்தை சுற்றிலும் 14 அதிவேக காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கருவி பந்து எல்லை கோட்டை கடந்து விட்டால் அடுத்த வினாடியே நடுவர் கையில் கட்டி இருக்கும் கை கடிகாரத்துக்கு தகவல் தெரிந்து விடும். இந்த தொழில்நுட்பம் மூலம் கால் பந்து விளையாட்டில் நீண்ட காலமாக நிலவி வந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வாய்ப்பு உருவாகி உள்ளது.

32 நாடுகள்

உலக கிண்ண கால்பந்து போட்டியில் 32 நாடுகள் பங்கேற்கின்றன. இந்த 32 நாடுகளும் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளதன. அவை வருமாறு:Fuss-Bool-BrasilFuss-Bool-Brasil-01Fuss-Bool-Brasil-02

குரூப்-ஏ பிரிவுFuss-Bool-Brasil-03

ஏ பிரிவில் பிரேசில், குரோஷியா, மெக்சிகோ, கேமரூன் ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன.

குரூப்-பி, சி பிரிவுகள்

இப் பிரிவில், ஸ்பெயின், நெதர்லாந்து, சிலி, ஆஸ்திரேலியாவும், குரூப்-சி பிரிவில் கிரீஸ், கொலம்பியா, ஐவேரிகோஸ்ட், ஜப்பான் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.

குரூப்-டி,இ பிரிவுகள்Fuss-Bool-Brasil-05

Fuss-Bool-Brasil-04

இதில் இத்தாலி, இங்கிலாந்து, உருகுவே, கோஸ் டாரிகாவும், குரூப்-இ பிரிவில், பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ஈக்வடார், ஹோண்டுராஸ் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.

குரூப்-எப், ஜி பிரிவுகள்Fuss-Bool-Brasil-06

குரூப்-எப் பிரிவில் அர்ஜென்டினா, போஸ்வனியா ஹெர்சகோவா, நைஜீரியா, ஈரானும், குரூப்-ஜி பிரிவில் ஜெர்மனி, போர்ச்சுக்கல், அமெரிக்கா, கானாவும், குருப்-எச் பிரிவில் பெர்ஜியம், அல்ஜியா, ரஷ்யா, தென்கொரியா ஆகிய நாடுகளும் இடம் பெற்றுள்ளன.

மைதானங்கள்

அதேபோல் உலக கிண்ண கால்பந்து போட்டி பிரேசில் நாட்டில் உள்ள ரியோடி ஜெனீரோவில் மரக்கா மைதானத்திலும், சவர் பாவ்லோவில் உள்ள அரினா மைதானத்திலும், பிரேசிலியாவிலுள்ள நசியோனல் மைதானத்தில், பெலோ ஹரிசோன்ட்டிலுள்ள மினிரோ ஸ்டேடியத்திலும், சல்வாடாரில் புதிதாக கட்டப்பட்ட அரினா பான்ட் நோவா ஸ்டேடியத்திலும், போர்ட்டோ அர்கிரியில் ஜோஸ் போர்ட்டோ மைதானத்திலும், பார்ட்லெசாவிலுள்ள அரினா கேஸ்டிலா ஸ்டேடியத்திலும், ரெசிபியிலுள்ள அரினா பெர்னாம் புகோவிலும், குயாபாவில் அரினா பன்டல் மைதானத்திலும், நட்டாலில் புதிதாக உருவாக்கப்பட்ட அரினா டாஸ்குனாஸ் மைதானத்திலும், மனாஸில் உள்ள அம்சோனியா மைதானத்திலும், குர்ட்டிபாவிலுள்ள அரினா டி பாய்க்டா மைதானத்திலும் நடைபெறுகிறது.

வண்ணமயமாக விழாக்கோலம் பூண்டது பிரேசில்

உலக கிண்ண கால்பந்து போட்டிகள் பிரேசிலில் இன்று தொடங்க உள்ள நிலையில் அந்த நாட்டின் முக்கிய நகரங்கள் வண்ணம் பூசப்பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளன. குகூள் ஸ்ட்ரீட் வியூவில் பிரேசிலின் அழகை பார்க்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கால்பந்து காச்சல்
உலக கிண்ண கால்பந்து போட்டிகள் பிரேசிலில் இன்று துவங்கி அடுத்தமாதம் 13ம்தேதி வரை நடைபெறுகின்றன. துவக்க ஆட்டத்திலேயே குரோஷியாவுடன், பிரேசில் விளையாட உள்ளதால் அந்த நாட்டில் கால்பந்து காச்சல் அதிகமாகியுள்ளது.

ரத்தம்.. சதை.. வெறி
காணும் இடமெல்லாம் கால்பந்து சார்ந்த நிகழ்வுகள், கேட்கும் ஒலியெல்லாம் கால்பந்து குறித்த பேச்சுக்கள், கனவிலும் கோல்கம்பத்துக்குள் பிரேசில் வீரர் அடிக்கும் பந்து செல்லும் காட்சி என ரத்தம், சதை என அனைத்திலும் பிரேசில் நாட்டுக்காரர்களுக்கு கால்பந்து வெறி கலந்துபோயுள்ளது.

அரிய மூலிகைகளின் அமேசான்

அமேசான் மழைக்காடுகளில் ஆரம்பித்து வடகிழக்கின் பரந்த கடல் பகுதிவரையிலான பிரேசிலின் ஒவ்வொரு பகுதியும் கால்பந்தாட்டத்தால் களைபெற்றுள்ளன. பல நாட்டு கலைஞர்களும் ரியோடி ஜெனிரோ, சாவ் பவுலோ, ரெசிபே, பீலோ ஹோரிசோன்ட் போன்ற முக்கிய நகரங்களில், வெளிநாட்டு ஓவியர்கள் குவிந்து பல வண்ணங்களில் ஓவியங்கள் வரைந்துள்ளனர். இதனால் பிரேசில் வண்ணக்கோலம் பூண்டுள்ளது.

வரைந்து தள்ளுகிறார்கள் .

தெருக்களில் பெயிண்ட் அடிப்பது பிரேசிலில் சட்டவிரோதம். ஆனால் கால்பந்து திருவிழாவுக்காக அந்த விதிமுறைகள் மகிழ்ச்சியோடு காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன. தங்கள் வீட்டு சுவற்றில் யாராவது வந்து ஓவியம் வரைந்து கொண்டிருந்தாலும், தடுப்பதற்கு யாரும் தயார் இல்லை.

கூகுள் தெரு வியூ

உள்ளூர் டாக்சிகளில் பிரேசில் நாட்டு தேசியக்கொடி பறக்கவிடப்பட்டுள்ளது. பூங்காக்களில் வண்ண பலூன்கள் கட்டி தொங்கவிடப்பட்டுள்ளன. பொருளாதார தேக்கத்தில் சிக்கியிருந்த பிரேசிலுக்கு உலக கோப்பை கால்பந்து பெரிய உத்வேகத்தை அளித்துள்ளது. கூகுள் தனது ஸ்டீட்வியூ சேவையில் பிரேசிலின் அழகை இணைத்துள்ளது.

வெற்றிக்காக காதிருக்கும் அணிகள்-
உலகக் கிண்ண கால்பந்து திருவிழாவில் ஸ்பெயின், பிரேசில், இங்கிலாந்து, ஜெர்மன், பிரான்ஸ் ஆகிய ஜாம்பவான்கள் கிண்ணம் வெல்லும் துடிப்புடன் காத்திருக்கின்றன. உலகக் கிண்ண கால்பந்து போட்டிகள் இன்று தொடங்குகின்றன. பிரேசிலில் 64 ஆண்டுகளுக்குப் பின்னர் உலகக் கிண்ண கால்பந்து போட்டிகள் நடைபெறுகின்றன. இம்முறை சொந்த மண்ணில் கிண்ணத்தை வென்றாக வேண்டும் என்ற ‘வெறியுடன்’ காத்திருக்கிறது பிரேசில். இந்த உலகக் கிண்ணத்தை வெல்லக் காத்திருக்கும் அணிகள் பற்றிய ஒரு பார்வை..Fuss-Bool-Brasil-07

பிரேசில்

உலகக் கிண்ண கால்பந்து போட்டிகளில் அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் அணி பிரேசில். ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற பிரேசில் இம்முறை தன் சொந்த மண்ணில் மகுடம் சூட காத்திருக்கிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற கான்ஃபெடரேசன் கிண்ண இறுதிச் சுற்றில் நடப்பு சாம்பியனான ஸ்பெயினை 3-0 என வீழ்த்தியதிருந்தது பிரேசில். கடந்த 1950 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தின் இறுதிச் சுற்று பிரேசிலின் ரியோடீ ஜெனீரோவில் நடைபெற்றது. அப்போது பிரேசிலும், அதன் அண்டை நாடான உருகுவேயும் யுத்தத்துக்கு தயாராக இருந்தன. மைதானத்தில் ஆட்டத்தைக் காண 1,73,850 கால்பந்து வெறியர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர். கால்பந்து தங்கள் ரத்தத்தில் ஊறியது என்பதால் வெற்றி தங்களுக்கே என பிரேசில் ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர். முடிவில் 2-1 என்ற கோல் கணக்கில் பிரேசில் தோல்வி அடைந்தது. இதனால் நாடே துக்கத்தில் ஆழ்ந்தது. 2002ஆம் ஆண்டுக்குப் பின் உலகக் கிண்ணத்தை வெல்ல முடியாத நிலையில் இருக்கும் பிரேசில் அணி முதல் ஆட்டத்தில் குரோஷியாவை எதிர்கொள்கிறது. கடந்த உலகக் கிண்ண போட்டியில் அர்ஜெண்டினாவின் மெஸ்ஸியின் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்ததைப் போல இந்தமுறை பிரேசில் அணியின் இளம் வீரர் நெய்மர் மீது எதிர்பார்ப்பு இருக்கிறது.Fuss-Bool-Brasil-08

இங்கிலாந்து

இம்முறை உலகக் கிண்ண கால்பந்தில் பிற அணிகளுக்கு சவாலாக இருக்கக் கூடிய அணிகளில் இங்கிலாந்தும் ஒன்றாக இருக்கும். 1966-ல் நடைபெற்ற 8-வது உலகக் கிண்ண கால்பந்து போட்டியை இங்கிலாந்து நடத்தியது.
அதில் இங்கிலாந்து முதல்முறையாக சாம்பியன் பட்டத்தையும் வென்றது. பேங்ஸ், மோரி, சார்ல்டன், கிரேவ்ஸ், ஹர்ட்ஸ், ஹன்ட் போன்ற வீரர்களைக் கொண்டிருந்தது இங்கிலாந்து அணி. இங்கிலாந்து அணியின் கேப்டன் ஃபிராங்க் லாம்பார்ட். இங்கிலாந்தில் நடைபெறும் பிரிமியர் லீக் தொடரி்ல், கடந்த 13 வருடங்களாக செல்சியா அணிக்காக ஃபிராங்க் லாம்பார்ட் விளையாடி உள்ளார். ஃபிராங் லாம்பார்ட் நம்பிக்கை வீரராக இருப்பதாக அந்த் அணியின் நிர்வாகி ராய் ஹோட்சென் கூறியுள்ளார். இந்த அணியில் ஜாக் வில்ஷெர், அலெக் ஓக்ஸ்லெட், ரோஸ் பர்க்லே ஆகிய சிங்கங்களும் இங்கிலாந்து அணியில் நம்பிக்கை நட்சத்திரங்களாக இருக்கின்றனர்.Fuss-Bool-Brasil-09
ஜெர்மனி

உலக கிண்ண கால்பந்து போட்டிகளில் பல்வேறு சாதனைகளை படைத்த நாடு ஜெர்மனி. ஒவ்வொரு உலக கிண்ண போட்டியிலும் தொடக்க சுற்று போட்டிகளில் பலமான அணிகளை வீழ்த்தி வெற்றிகளை தொடர்ந்து குவித்தாலும், அரையிறுதியில் தோற்றுப் போய் வெளியேறுவது ஜெர்மனிக்கு வாடிக்கையாகப் போய் விட்டது.

1954ம் ஆண்டு முதல் முறையாக ஜெர்மனி அணி உலக கிண்ணத்தை வென்றது. கடைசியாக 1990ம் ஆண்டு இத்தாலியில் நடந்த போட்டியில் உலக கிண்ணத்தை வென்றது அப்போதைய மேற்கு ஜெர்மனி அணி. அதன் பின்னர் ஒன்றுபட்ட ஜெர்மனி அணிக்கு உலக கோப்பை வெற்றி கனவாகவே இருந்து வருகிறது.

2002ம் ஆண்டு ஜப்பான் நாட்டில் யோகஹாமா நகரில் நடந்த உலக கிண்ண கால்பந்து போட்டிகளின் போது இறுதி வரை முன்னேறியது ஜெர்மனி அணி. இறுதிப் போட்டியில் வீறு பிரேசிலிடம் சரணடைந்து தோல்வி கண்டனர் ஜெர்மனி வீரர்கள்.

அதன் பின்னர், கடந்த இரண்டு உலக கிண்ண போட்டிகளிலும் ஜெர்மனி சிறப்பாக விளையாடினாலும், உலக கிண்ணம் கிடைக்கவில்லை. இரண்டிலும் ஜெர்மனி அணி அரையிறுதியில் தோல்வியடைந்து வெண்கலப்பதக்கத்துடன் திருப்திப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது.

24 ஆண்டுகளாக உலக கிண்ணத்திற்காக போராடி வருகிறது ஜெர்மனி. இது குறித்து கருத்து தெரிவித்த ஜெர்மனி கால்பந்து அணியின் கேப்டன் பிலிப் லாஹெம். ‘உலக கிண்ண அரையிறுதி போட்டியில் மீண்டும் வெளியேறக்கூடாது என எண்ணுகிறேன். பிரேசிலில் உலக கோப்பையை வெல்வதுதான் எனது தீர்க்கமான இலக்கு. உலக கிண்ணத்தை வெல்வதற்கு தேவையான தாக்குதல் நடத்தக்கூடிய அணி எங்களிடம் உள்ளது. எங்களது வீரர்களிடம் உள்ள திறமையும், தாங்களே உயர்ந்தவர் என்ற எண்ணமும் அணிக்கு நலன் பயப்பதாக மட்டுமே அமைய வேண்டும் என்றார்.Fuss-Bool-Brasil-10

பிரான்ஸ்

உலகக் கிண்ண கால்பந்தை வெல்லக் கூடிய வாய்ப்பு உள்ள அணிகளில் பிரான்ஸும் ஒன்று. இந்த அணியின் முன்னணி வீரர் பிராங் ரிபரி, முதுகு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக உலக கோப்பை போட்டியில் இருந்து விலகியுள்ளார். இது பிரான்ஸ் அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. ஐரோப்பிய கால்பந்து போட்டிகளின் அனுபவத்தை கொண்டு பிரான்ஸ் அணியின் வீரர்கள் பட்ரிஸ் எவ்ரா, ரபேல் ஆகியோர் முழுத் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பிருக்கிறது.

Fuss-Bool-Brasil-11Fuss-BailFuss-Bail-01Fuss-Bail-02Fuss-Bail-03Fuss-Bail-04Fuss-Bail-05Fuss-Bail-06

2,079 total views, 1,561 views today

1

 

0

 

0

 

0

 

1

 

 

SHARE