ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற குழு நுரைசோலை அனல் மின்னிலையத்தை பார்வையிட சென்றுள்ளது.

517

ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற குழு ஒன்று நுரைசோலை அனல் மின்னிலையத்தை பார்வையிட சென்றுள்ளது. மக்கள் பணத்தைக் கொண்டு நிர்மாணிக்கப்பட்ட வேலைத்திட்டங்களில் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி குற்றம் சுமத்தி வருகிறது.

அத்துடன் சில வேலைத்திட்டங்கள் மக்களுக்கு பலனற்றவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முதல் ஹம்பாந்தொட்டையில் உள்ள துறைமுகம் மற்றும் மத்தளை வானூர்தி நிலையம் என்பவற்றை ஐக்கிய தேசிய கட்சி ஆய்வு செய்திருந்தது.

இதன் போது அரசாங்கத் தரப்பினர் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் மீது தாக்குதலையும் நடத்தி இருந்தனர். இந்த நிலையில் நுரைச்சோலை அனல் மின்னிலையத்தை பார்வையிடுவதற்கான குழு ஒன்று இன்று அங்கு செல்கிறது.

SHARE