ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழு இலங்கையை தண்டிக்கும் நோக்கத்துடனேயே செயற்படுகிறது-அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவர் பிரசாத் காரியவசம்

423

 ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழு இலங்கையை தண்டிக்கும் நோக்கத்துடனேயே செயற்படுகிறது என குற்றம்சாட்டியுள்ள அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவர் பிரசாத் காரியவசம் அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையில் யுத்தத்தின் இறுதி கட்டங்களில் நடைபெற்ற விடயங்கள் தொடர்பாக முரண்பாடுகள் காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.

images (8)

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.

நல்லிணக்கத்தையும் ஐக்கியத்தையும் ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை உள்நாட்டிலேயே நாம் ஆரம்பித்துள்ளோம். எமக்கு பொறுத்தமான வேகத்தில் அதனை முன்னெடுக்கிறோம்.

உளளுர் நடவடிக்கைகள் முழுமை பெறுவதற்கு முன்னர் அதற்கான கால அவகாசத்தை வழங்காமல் ஒரு நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடுவது என்பது சர்வதேச சட்டங்களுக்கு எதிரானதாகும்;;.

இலங்கை மக்களுக்கு விருப்பமில்லாத செயற்பாடுகளில் அரசாங்கத்தை ஈடுபடுத்துவதற்காக அதன் மீது அழுத்தங்களை கொடுக்கும் நோக்குடனான செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. இதன் காரணமாகவே நாங்கள் சர்வதேச தலையீடுகளை எதிர்க்கிறோம்.

இலங்கையில் மனித உரிமை நெருக்கடியோ அல்லது உலகின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான பாதுகாப்பு நிலவரமோ காணப்படவில்லை. இவ்வாறான சூழ்நிலையில் ஏன் உலகின் கவனம் பெருமளவிற்கு அந்த நாட்டின் மீது காணப்படுகின்றது என நாங்கள் ஆச்சரியமடைந்துள்ளோம்

விடுதலைப் புலிகளை தோற்கடித்ததற்கு பழிவாங்குவதற்காக வெளிநாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளின் செயற்பாடாயிதுவென சில இலங்கையர்கள் சந்தேகமடைந்துள்ளனர்.

இலங்கை, நிலைமையை சுமூகமாக்க கூடிய நீதி நிலைநாட்டப்படுவதையே விரும்புகிறது, தண்டனை வழங்கும் நோக்கிலான நீதியை அது விரும்பவில்லை, ஆனால் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் நோக்கம் இதுவாகவேயுள்ளது,

வுpசாரணைக்காக அமைக்கப்பட்ட குழுகூட ஐ.நாவால் வழங்கப்பட்ட ஆணைக்கு மாறானதாக உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

SHARE