ஒபாமாவை சிறிலங்கா வருமாறு அழைப்பு விடுத்த மங்கள சமரவீர !!!

400

 

அமெரிக்க அதிபர் சிறிலங்காவுக்கு வருகை தருவதை தாம்  எதிர்பார்த்திருப்பதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

வொசிங்டனில் உள்ள அனைத்துலக அமைதிக்கான கார்னெகி அறக்கட்டளையில், ‘அதிபர் தேர்தலுக்குப் பின்னர் சிறிலங்கா’ என்ற தலைப்பில், நேற்று உரையாற்றிய போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இன்று  அமெரிக்க வெளிவிவகாரச் செயலர் ஜோன் கெரியை சந்திக்கும் போது, சிறிலங்காவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கவுள்ளேன்.

வெள்ளிக்கிழமை ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனைச் சந்திக்கும் போது, அவரையும் சிறிலங்காவுக்கு வருகை தருமாறு அழைக்கவுள்ளேன்.

அமெரிக்க அதிபர் சிறிலங்காவுக்கு வருகை தருவதையும் கூட நாங்கள் பார்க்க விரும்புகிறோம்.

அது நடந்தால், 1948ம் ஆண்டு சிறிலங்கா சுதந்திரம் பெற்ற பின்னர், அமெரிக்க அதிபர் ஒருவர் அங்கு வருகை தரும் முதல் சந்தரப்பமாக அமையும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

SHARE