ஒருநாள் போட்டியில் மோசமான பந்துவீச்சு சாதனை படைத்த அவுஸ்திரேலிய வீரர்

134

 

சர்வதேச ஒரு நாள் போட்டியில் அதிக ஓட்டங்களை விட்டுக்கொடுத்து மோசமான பந்துவீச்சு சாதனையை படைத்துள்ளார் அவுஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் அடம் சாம்பா.

நேற்று முன்தினம் செஞ்சூரியனில் நடைபெற்ற தென்னாபிரிக்க அணிக்கெதிரான போட்டியிலேயே அவர் இந்த சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

இதன்படி அவர் 10 ஓவர்கள் பந்துவீசி 113 ஓட்டங்களை விட்டுக் கொடுத்துள்ளார்.

மோசமான சாதனை
இவ்வாறு மோசமான சாதனை படைத்த நான்கு வீரர்கள் விபரம் வருமாறு,

அவுஸ்திரேலிய வீரர் அடம் சாம்பா – 2023 செஞ்சூரியன் எதிரணி தென்னாபிரிக்கா -113 ஓட்டங்கள்

அவுஸ்திரேலிய வீரர் மைக் லூவிஸ் அவுஸ்திரேலிய வீரர் 2006 ஜொகன்னஸ்பேர்க் எதிரணி தென்னாபிரிக்கா-113 ஓட்டங்கள்

பாகிஸ்தான் வீரர் வாகாப் றியாஸ் 2016 நொட்டிங்ஹாம் எதிரணி இங்கிலாந்து 110 ஓட்டங்கள்

ஆப்கான் வீரர் ரஷித்கான் 2019 மான்செஸ்ரர் எதிரணி இங்கிலாந்து 110 ஓட்டங்கள்

SHARE