பாரதிராஜா இயக்கிய ‘பொம்மலாட்டம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் காஜல் அகர்வால். அந்தப் படம் வெளிவந்து சுமார் ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டது. இருந்தாலும் அப்போது எப்படி இருந்தாரோ அப்படியேதான் இன்று வரை இருக்கிறார். ஒல்லியாகவும் இல்லாமல் குண்டாகவும் இல்லாமல் சரியான உடலமைப்பில் அவருடைய அழகை அவர் பராமரித்து வருகிறார். தமிழை விட தெலுங்கில் காஜல் அகர்வாலுக்கு வரவேற்பு அதிகம். அதோடு ஹிந்திப் படங்களிலும் நடித்து அங்கம் புகழ் பெற்று விட்டார். சமீபத்தில் விஜய்யுடன் ‘ஜில்லா’ படத்தில் ஜோடியாக நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார்.
தன்னுடைய அழகு ரகசியம் என்ன என்பதை காஜல் அகர்வாலே கூறுகிறார். “ எனக்கு பெங்காலி ஸ்வீட்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். சாக்லேட் இல்லாமல் ஒரு நாள் கூட இருக்க மாட்டேன். ஐஸ் க்ரீம் என்றால் அவ்வளவு ஆசை. இவையெல்லாம் வழக்கமாக நான் சாப்பிடும் ஐயிட்டங்கள். அப்புறம் ஹைதராபாத் பிரியாணி என்றால் ரொம்பவே பிடிக்கும். மதிய உணவு நேரத்தில் எனக்கு கண்டிப்பா பிரியாணி இருக்க வேண்டும். எப்போதெல்லாம் ஹைதராபாத் வருகிறேனோ, அப்போது பிரியாணி சாப்பிடாமல் இருக்க மாட்டேன்,” என்கிறார்.
இவ்வளவு சாப்பிட்டும் எப்படி குண்டாகமல் இருக்கிறார் என்கிறீர்களா, அதற்கும் பதில் வைத்திருக்கிறார். “நான் நிறையவே சாப்பிடுவேன். இருந்தாலும் தினமும் உடற்பயிற்சி செய்யாமல் இருக்க மாட்டேன். யோகா, ஏரோபிக் இவற்றோடு கார்டியோ உடற்பயிற்சிகளையும் செய்வேன். உடற்பயிற்சி செய்யறதுல ரொம்பவே கவனமா இருப்பேன்,” என்கிறார்.
இப்ப ஏன் தெரியுதா காஜல் அகர்வால் ஏன் கவர்ச்சியா இருக்கிறாருன்னு…!