காட்டுப் பகுதியில் விடுதலைப் புலிகளின் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.

727

 

வவுனியா நெடுங்கேணி பிரதேசத்தில் இருந்து சுமார் 15 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள வெடிவைத்தகல் கிராமத்தில் இடம் பெற்ற மோதலில் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டவர்களின் சடலங்கள் பதவியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இதேவெளை இச் சடலங்களின் மரணவிசாரணை நடத்தும் அதிகாரமும்  அனுராதபுரம் நீதிவானிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாவும தெரியவருகின்றது.


வவுனியா நெடுங்கேணி சேமமடு வீதியில் உள்ள வெடிவைத்தகல் பிரதேசத்தில்  மக்கள் குடிமனையற்ற download (1) மூன்று உறுப்பினர்கள் என தெரிவிக்கப்பட்ட கோபி, அப்பன், தேவிகன் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.


இராணுவத்திற்கு கிடைத்த தகவலை அடுத்து குறித்த பிரதேசத்தை நேற்று மாலை இராணுவத்தினர் சுற்றி வளைத்து தேடுதல் நடத்தியபோது இராணுவத்தால் தேடப்பட்டு வந்த கோபி உள்ளிட்ட மூவர் அங்கிருந்து தப்பிச் செல்ல முற்பட்டதாகவும் அதனையடுத்து இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் அவர்கள் மூவரும் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது 

இதேவேளை கோபி என்றொரு பாத்திரம் அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டு புலிகளின் புதிய தலைவர் என பட்டம் சூட்டப்பட்டு, பின்னர் அவருடன் இணைத் தலைவர்களாக சேர்க்கப்பட்ட தேவிகன் மற்றும் அப்பன் என்ற பாத்திரங்களும் அரசாங்கத்தினதும் இலங்கைப் புலனாய்வுப் பிரிவினதும் திட்டமிட்ட நாடகம் என குளோபல் தமிழ்ச் செய்திகள் தொடர்ச்சியாக கூறிவந்தது. அந்தக் கூற்று இன்று இலங்கை அரசாங்கமும் பாதுகாப்பு தரப்பும் நடந்து கொண்ட விடயத்தின் மூலம் உறுதியாகி இருப்பதனை வாசகர்கள் அனைவரும் புரிந்துகொள்ள முடியும்.

குறிப்பாக சுட்டுக்கொல்லப்பட்ட இவர்களின் சடலங்களை பதவியா வைத்தியசாலைக்கு அனுப்பியதும், அனுராதபுரம் நீதவானிடம் மரண விசாணை ஒப்படைக்கப்பட்டதும் பல்வேறு கேள்விகளை தோற்றுவித்துள்ளதாக வன்னியில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE