காணாமற்போனோர் தொடர்பில் மகஜர் கையளிக்க பொலிஸார் மறுத்ததன் காரணமாக நடு வீதியில் அமர்ந்த சிவாஜிலிங்கம்

383

P1150057

30.08.2014 இன்று வவுனியாவில் நடைபெற்ற காணாமல் ஆக்கப்படுத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்தில் வவுனியா அரச அதிபரிடம் மகஜர் ஒன்றினைக் கையளிப்பதற்காக வவுனியா நகரசபை மண்டபத்தில் கூட்டங்கள் நடைபெற்று முடிந்தவுடன் பதாதைகளை ஏந்தியவாறு காணாமற்போனோரினுடைய உறவினர்கள் மற்றும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினர்கள், வடமாகாணசபை உறுப்பினர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் தலைவர்கள், சகோதர மொழி இனத்தவர்கள் சகிதம் கலந்துகொண்ட இவ்வைபவத்தில் மகஜர் கையளிக்கவிடாது பொலிஸார் தடுத்துநிறுத்தியிருந்த அதேநேரம் இது தொடர்பில் பொலிஸார் கருத்துத்தெரிவிக்கையில் மகஜரினைக் கையளிக்க 05 பேர் மட்டும் செல்வதற்காக அனுமதி வழங்கப்பட்டதாகவும், வரிசையாக கச்சேரி வளாகத்திற்குள் செல்ல அனுமதியளித்ததாகவும் இவ்வொழுங்குகளை மீறியதால் அனுமதி மறுக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர். காணாமற்போனோர் தொடர்பில் மகஜர் கையளிப்பதற்கோ, ஆர்ப்பாட்டங்களை நடாத்துவதற்கோ அரசாங்கம் இழுத்தடிப்பு செய்வதென்பது குறிப்பிடத்தக்கவிடயமாகும்.

P1150004

P1150009 P1150004 P1150107

P1150101 P1150065

P1150035 P1150009 P1150011

P1150057

தகவலும் படங்களும :- இ.தர்சன்

SHARE