காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னால் சாட்சியமளிப்பவர்கள் இலங்கைப் படையினரால் அச்சுறுத்தப்படுவதாக அமெரிக்க தூதரகம் வெளியிட்ட குற்றச்சாட்டை இலங்கை இராணுவம் மறுத்துள்ளது.
இலங்கை இராணுவப் பேச்சாளர் ருவான் வணிகசூரிய இந்த மறுப்பை வெளியிட்டுள்ளார்.
இவ்வாறான சம்பவங்கள் எவையும் இடம்பெறவில்லை. புலம்பெயர்ந்த தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான ஊடகங்கள் வெளியிடும் தகவல்களை அடிப்படையாகக்கொண்டே அமெரிக்க தூதரகத்தின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இது அடிப்படையற்றது என்றும் ரூவன் வணிகசூரிய குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான நம்பகமான தகவல்கள் கிடைத்தால் அமெரிக்க தூதரகம் தமது அதிகாரத்துக்கு உட்பட்ட வகையில் இலங்கை அரசாங்கத்துக்கு முறையிடலாம்.
இதனைவிடுத்து ஊடகங்களுக்கு அறிக்கைகளை வெளியிடுவது அதன் அதிகார வரம்பு மீறிய செயற்பாடு என்று வணிகசூரிய குறிப்பிட்டுள்ளார்