காத்தான்குடி பொலிஸ் பிரிவில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு

367
காத்தான்குடி பொலிஸ் பிரிவில் இளைஞர் ஒருவரின் சடலமொன்று நேற்று இரவு 8.30 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது.

புதிய காத்தான்குடி பதுறியா பாடசாலை  வீதியைச் சேர்ந்த 17 வயதுடைய பாறூக் முஹம்மது றிகாஸ் எனும் இளைஞனின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

இந்த இளைஞன் வீட்டினுள் உயிரிழந்த நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். இந்த சமயம் வீட்டினுள் எவரும் இருக்க வில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

சடலத்தை மீட்ட பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சடலம் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

SHARE