கோபி, அப்பன், தேவியன் ஆகியோர் மரணம் தொடர்பில் நீதிமன்றில் நேற்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

613
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புதிய தலைவர்களாக கருதப்பட்ட கோபி,  அப்பன் மற்றும் தேவியன் ஆகியோரின் மரணம் தொடர்பில் நீதிமன்றில் நேற்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

மூன்று பேரும் ரைபிள் ரக துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியே உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தலை மற்றும் வயிற்றுப் பகுதிகளில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

குறித்த நபர்களின் மரணம் தொடர்பில் கெப்பிற்றிகொல்லாவ நீதவான் எஸ்.மகேந்திரராஜா முன்னிலையில் விசாரணை நடத்தப்பட்டது.

புலி உறுப்பினர்களின் குடும்ப அங்கத்தினர்களுக்கு மரண சான்றிதழ்களை வழங்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

பதவிய சுற்றுலா நீதிமன்றின் முன்னிலையில் அளிக்கப்பட்ட சாட்சியங்கள் மற்றும் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை ஆகியன தொடர்பிலும் விசாரணைகளின் போது கவனம் செலுத்தப்பட்டது.

கடந்த ஏப்ரல் மாதம் 11ம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் என படைத் தரப்பினரால் அடையாளப்படுத்தப்பட்ட கோபி, அப்பன் மற்றும் தேவியன் ஆகியோர் பதவிய பிரதேசத்தில் வைத்து இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்திருந்தனர்.

 

SHARE