சமந்தா மட்டுமில்ல! விஜய்யுடன் மூன்றாவது முறையாக கைகோர்க்கும் 31 வயது நடிகை..

111

 

தளபதி விஜய்யின் கடைசி படம் குறித்து பல தகவல்கள் தொடர்ந்து வெளியாகிறது. ஆனால், அவை யாவும் அதிகாரப்பூர்வமான தகவலாக இல்லை.

ஹெச். வினோத் இப்படத்தை இயக்கப்போகிறார் என கூறப்படுகிறது. ஆனால், இதுவரை இப்படத்திற்கான தயாரிப்பாளர் யார் என தெரியவில்லை. ஏ.ஜி.எஸ் மற்றும் பேஷன் ஸ்டூடியோ ஆகிய நிறுவனம் இப்படத்தை கைப்பற்று ஆர்வம் காட்டி வருவதாக பிரபல பத்திரிகையாளர் கூறியிருந்தார்.

இரண்டு ஜோடி
தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கப்போகும் நடிகை குறித்து கடந்த சில வாரங்களுக்கு முன் தகவல் ஒன்று வெளியானது. இதில், சமந்தா தான் விஜய்யின் கடைசி படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கப்போகிறார் என கூறப்பட்டது.

இந்த நிலையில், லேட்டஸ்ட் அப்டேட் என்னவென்றால், இப்படத்தில் விஜய்யுடன் இரண்டு முன்னணி நடிகைகள் இணையவுள்ளார்களாம்.

அதில் ஒருவர் சமந்தா என்றும், மற்றொருவர் கீர்த்தி சுரேஷ் என்றும் திரை வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

இது மட்டும் நடந்தால், இதன்மூலம் சமந்தா விஜய்யுடன் 4வது முறையும், கீர்த்தி சுரேஷ் 3வது முறையும் கைகோர்க்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE