சிறிலங்கா அரச படைகள் மேற்கொண்ட தமிழர்களுக்கு எதிரான திட்டமிட்ட இனப்படுகொலை குறித்து ஐ.நா.மனித உரிமைகள் பேரவை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

453
dcp7477
ஐ.நா.விசாரணைக் குழுவின் சாட்சியங்கள் சேகரிக்கும் முயற்சிக்கு தமிழக அரசு ஆதரவு
சிறிலங்கா அரச படைகள் மேற்கொண்ட தமிழர்களுக்கு எதிரான திட்டமிட்ட இனப்படுகொலை குறித்து ஐ.நா.மனித உரிமைகள் பேரவை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.உலகெங்கும் புலம்பெயர்ந்து வாழ்ந்துவரும் ஈழத்தமிழர்களிடம் அதற்கான சாட்சியங்களை திரட்டும் பணிகள் ஐ.நா.மனித உரிமைகள் பேரவை அமைத்த விசாரணைக் குழுவினாலும் விசாரணைக் குழுவினரின் வழிகாட்டுதலில் ஈழத்தமிழ் அமைப்புக்களினாலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
sddefault

இந்த வரலாற்று முயற்சியின் ஒரு பகுதியாக தமிழகத்தில் உள்ள ஈழத்தமிழர்களிடம் சாட்சியங்களை சேகரிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் காவல்துறை மற்றும் கியூ பிரிவு உளவுத்துறையினரால் எமது உறுவுகள் அனுபவித்துவரும் துன்புறுத்தல்கள் ஆச்சுறுத்தல்கள் காரணமாக சுதந்திரமாக தமது சாட்சியங்களை வழங்க தயங்கிவருகின்றார்கள்.

இது தொடர்பாக ஏற்பட்ட தயக்க நிலையை போக்குவதற்கு பல்வேறு முயற்சிகள் சம்பந்தப்பட்டவர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஈழத்தமிழ் ஆதரவு அமைப்புகளால் நேரில் தமிழக முதல்வரை சந்தித்து இதுதொடர்பாக பேசுவதற்கு அனுமதி கோரப்பட்டுள்ளது.

ஒருபக்கம் அந்த முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் இது குறித்து இன்றைய தமிழக அரசின் முக்கிய வட்டாரங்களில் பேசிய போது தமிழக சடமன்றத்தில் இது குறித்து தீர்மானங்களை நிறைவேற்றி அதன் தொடர்ச்சியாக தற்போது புதிதாக அமைந்துள்ள மோடி தலைமையிலான அரசிடமும் சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்டு வரும் சுதந்திர பன்னாட்டு விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்தப்பின்னணியில் தமிழக அரசு நிச்சயமாக ஆதரவாக இருக்கும் என உறுதியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாட்சியங்களை வழங்குவதில் எமது மக்களுக்கு இருக்கும் பிரச்சினைகள் குறித்தும் சாட்சியங்களை சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பவர்கள் எதிர்நோக்கும் இடையூறுகள் குறித்தும் அவர்களிடம் தெரிவித்தபோது இதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதுவித இடையூறுகளும் ஏற்படாது என உறுதிபடத் தெரிவித்துள்ளார்கள்.

தமிழகத்தில் உள்ள எமது உறவுகள் தயக்கமின்றி உங்களின் சாட்சியங்களை வழங்க தயாராக இருங்கள். சாட்சியங்களை சேகரிக்கும் பணியில் உள்ளவர்கள் உங்களைத் தேடிவருவார்கள். அப்போது உங்களிற்கு தெரிந்த விபரங்களை தெரிவித்து ஒத்துழைப்பை வழங்குமாறு உங்களை உரிமையோடு கேட்டுக் கொள்கின்றோம்.

 

SHARE