சுந்தர் சி படத்திற்காக 3 கோடி ரூபாய் செலவில் அரண்மனை செட்!

634

தீயா வேலை செய்யணும் குமாரு படத்திற்குப் பிறகு சுந்தர் சி இயக்கும் படம் அரண்மனை.

இந்தப் படத்தை சுந்தர்.சி இயக்குவதுடன் அதில் ஹீரோவாகவும் நடிக்கிறார். மேலும் இன்னொரு கதாநாயகனாக வினய் நடிக்க, ஹன்சிகா, ஆண்ட்ரியா, லட்சுமிராய் மூன்று பேரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். இவர்களுடன் சரவணன், நிதின் சத்யா கோவை சரளா, மனோபாலா, காதல் தண்டபாணி, கோட்டா சீனிவாசராவ், சித்ரா லட்சுமணன், சந்தான பாரதி, ஆர்த்தி, லொள்ளு சபா சாமிநாதன், கிரேன் மனோகர், இயக்குனர் ராஜ்கபூர், வெள்ளை பாண்டி தேவர், சிவஷங்கர் மாஸ்டர், சீர்காழி சிவசிதம்பரம், பாடகர் மாணிக்கவிநாயகர் என ஒரு மாபெரும் நட்சத்திரப் பட்டாளமே இதில் நடித்திருக்கிறது.

“இது என்னுடைய வழக்கமான படமில்லை. திகில் சஸ்பென்ஸ் கலந்த ஹர்ரர் மூவி…” என்கிறார் சுந்தர் சி. இந்தப் படத்தில் முக்கியமாக இடம் பெறும் அரண்மனைக்காக பல இடங்களில் தேடியிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் நினைத்த மாதிரி அரண்மனை எங்கு தேடியும் அமையவில்லையாம். மேலும் தேடினால் சரிபட்டு வராது என்பதை உணர்ந்த சுந்தர்.சி ஐதராபாத்தில் அரண்மனை போன்ற மிகப் பிரம்மாண்டமான செட்டை அமைத்து, முழுக்க முழுக்க அந்த செட்டில் படப்பிடிப்பை நடத்தியுள்ளார்.

மிகப் பிரமாண்டமான இந்த அரண்மனையை கோடி ரூபாய் செலவில் 400 ஊழியர்கள் 3 மாத காலம் இரவு, பகலாக உழைத்து உருவாக்கியுள்ளனர். பரத்வாஜ் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். சுந்தர்.சியின் ஆஸ்தான ஒளிப்பதிவாளரான யு.கே.செந்தில்குமார் தான் ஒளிப்பதிவு செய்கிறார். தனது வழக்கமான காமெடி பாணியிலிருந்து விலகி இதனை ஒரு த்ரில்லார் படமாக இயக்குகிறார் சுந்தர்.சி. படத்தின் இறுதிக் கட்ட வேலைகள் நடந்து வருகின்றன. இப்படத்தின் பாடல் வெளியீடு மிக விரைவில் நடைபெற இருக்கிறது.

 

SHARE