நடைபெற்று முடிந்த இந்தியாவின் புதிய பிரதமர் பதவியேற்பு வைபவ விழாவில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை தமிழ் நாட்டு அரசியல்வாதிகளின் எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும் அவரை உள்வாங்கிக்கொண்டமையானது மோடி அரசிற்கு ஒரு சவாலாகவே அமையப்பெறுகிறது. அதேநேரம் மஹிந்த அரசின் துணிச்சல் மிக்க செயற்பாடு என்றும் கூறலாம். மோடி அரசினைப்பொறுத்தவரையில் மஹிந்த ராஜபக்ஷவுடன் நெருங்கிய தொடர்புகளை வைத்துக்கொண்டால் தான் ஆசியப்பிராந்தியத்தில் தனது ஆதிக்கத்தினை இந்திய அரசினால் தக்கவைத்துக்கொள்ளமுடியும். இல்லையென்றால் சீன, அமெரிக்க நாடுகள் இலங்கையை தன்பக்கம் சாதகமாக்கிக்கொள்ள வாய்ப்புக்கள் இருக்கின்றன. மற்றுமல்லாது வர்த்தக உறவு விரிசலடையும்.
அதாவது இந்தியப் பொருட்களே இலங்கைச் சந்தையில் அதிகமாக விற்படுகிறது. மஹிந்த ராஜபக்ஷ அவர்களை பதவியேற்பு வைபவத்திற்கு எதிர்ப்புக்கள் மத்தியிலும் அழைத்திருக்காது போனால் இந்திய அரசு பாரிய விளைவுகளை சந்திக்க நேர்ந்திருக்கும். அதனை சவால் எனக் கொள்ள முடியாத மோடி அரசு, மஹிந்த ராஜபக்ஷ அவர்களை தனது வைபவத்திற்காக வரவழைத்தது. சார்க் அமைப்பின் அங்கத்துவத் தலைவர்களுக்கே அழைப்புவிடுக்கப்பட்ட அதேநேரம் இலங்கையரசை தன் பக்கம் தக்க வைத்துக்கொள்ளும் நோக்கில் தமிழக அரசின் எதிர்ப்பையும் மீறி மோடி அரசு செயற்பட்டது. இவைகள் தான் பிரதான காரணங்களாக அமைகின்றன. தவிர 13வது திருத்தச்சட்டத்தினை நிறைவேற்றுவார்கள் என்றல்ல. காங்கிரஸ் அரசினை விடவும் பன்மடங்கு குரோத மனப்பாங்குடனே இவ்வரசு செயற்படும்.
தீவிரவாதிகளை கட்டுப்படுத்துவது மோடியினுடைய ஒரு நிலைப்பாடு. விடுதலைப்புலிகளையும் தீவிரவாதிகள் என்கின்ற கண்ணோட்டத்தில்தான் பார்க்க நேரிடும். காங்கிரஸ் அரசினால் இலங்கைப்பிரச்சினைகள் கடந்த 30 வருட காலமாக தீர்த்துவைக்கப்படவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். தந்தை செல்வாவின் காலந்தொடக்கம் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க வரை விடுதலைப்போராட்டத்திற்கு இலங்கையரசினால் தீர்வுகள் வழங்கப்படவில்லை. தமிழ் மொழிக்கான அங்கீகாரமும் பாராளுமன்றத்தில் கொண்டுவராது தனிச்சிங்களம் என்கின்ற கோட்பாட்டினையே கொண்டிருந்தனர். சிவகுமாரனுடைய ஆரம்பகாலப் போராட்டம் என்பது தமிழ் மாணவர்களுக்கெதிரான கல்விச்செயற்பாடுகளில் இருந்தே ஆரம்பமாகின. இதனால் பல்கலைக்கழக மாணவர்களின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி நிலையே காணப்பட்டது. இவ்வாறுதான் அவ்வரசாங்கங்கள் செயற்பட்டனவே தவிர, மாகாணசபை நிறுவப்பட்டு அதற்கான அதிகாரங்கள் பாராளுமன்றத்தில் தமிழ் மொழி அங்கீகாரம் போன்ற அதிகாரங்கள் மஹிந்த அரசினால் வழங்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் தமிழ் மக்களுக்கான முழுமையான தீர்வு மஹிந்த அரசினால் வழங்கப்படுவதாக இல்லை. வழங்கவும் மாட்டார்கள். ஏனென்றால் சிங்களப் பேரினவாதக் கட்சிகள் இதற்கு முட்டுக்கட்டையாக இருந்து செயற்படுகின்றன. அன்று தமிழ்மக்களுக்கான சுயநிர்ணய உரிமைக்கெதிராக செயற்பட்டுவந்த பண்டாரநாயக்க அவர்கள் பௌத்த பிக்கு ஒருவரினாலேயே சுட்டுக்கொல்லப்பட்டார்.
பண்டாரநாயக்கா செல்வாவுக்கும் இடையிலான ஒப்பந்தம் அத்தோடு நிறைவடைந்தது. இவ்வாறாகவே தமிழினம் ஏமாற்றப்பட்டுவந்தது என்பதே வரலாறு. தற்பொழுது விடுதலைப்புலிகளின் போராட்டம் ஒரு நிலைப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கின்றது. பா.ஜ.க அரசின் காலப்பகுதியில் விடுதலைப்புலிகளின் போராட்டம் தொடர்பில் பெரிதளவில் அலட்டிக்கொள்ளாதவர்களாகவே இருந்தனர். தற்பொழுது மோடி அரசினைப்பொறுத்தவரையில் தமிழ்நாட்டை சமப்படுத்த வேண்டுமாகவிருந்தால் 13வது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்தவேண்டும் என்கின்ற பொய்யான வாக்குறுதியை இலங்கையரசிற்குக் கூறினால்தான் தமிழகம் அதனோடு திருப்தியடையும் அவ்வாறானதொரு செயற்பாட்டையே நரேந்திரமோடி அவர்கள் செய்திருக்கின்றார். இதனை வைத்தே பலரும் இனி அரசியல் காய்நகர்த்தல்களை மேற்கொள்வார்கள். இலங்கை அரசினால் வடமராட்சியில் நடத்தப்பட்ட ஒப்பரேஷன் லிபரேஷன் என்ற நடவடிக்கையின் போது இந்திய இராணுவம் பிரபாகரன் உட்பட அவரது சகாக்களை காப்பாற்றியது. மொராச் விமானங்கள் மூலமாக மக்களுக்கான உணவுப்பொதிகள் வழங்கப்பட்டது. இதேபோன்றுதான் முள்ளிவாய்க்கால் பிரச்சினைகளிலும் கூட தமிழினம் ஒடுக்கப்பட்டு பிரபாகரனும் அவருடைய சகாக்களும் சுற்றிவளைக்கப்பட்டனர்.
காங்கிரஸ் அரசு கண்மூடிக்கொண்டு பிரபாகரனும், அவரது சகாக்களும் அழிந்துபோகட்டும் என கண்சாடையாக செயற்பட்டது. தமிழ்மக்களுக்காக அங்கிருக்கும் ஒரு சில அரசியல்வாதிகள் தமிழ்மக்களுக்காக குரல்கொடுத்தார்கள் ஆனால் அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஆனால் அவற்றை இந்தியரசு திரும்பிப்பார்க்கவுமில்லை. தற்போது என்னவென்றால் பா.ஜ.க அரசாங்கம் தமிழ்மக்களுக்கானதொரு தீர்வை வழங்குவோம் எனக்கூறிவருகின்றது என்பது வேடிக்கைக்குரிய விடயமாகும்.
மோடியின் மக்களுக்கான முதல் செய்தி. ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவோம்.
நரேந்திர மோடி, பிரதமர் அலுவலக அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவோம் என்று தனது முதல் செய்தியைத் தெரிவித்துள்ளார்.
மோடி பிரதமராகப் பொறுப்பேற்ற பின் பிரதமர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தனது முதல் பதிவைத் திங்கள்கிழமை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், இந்திய மக்கள் கடந்த 16ம் திகதி தங்கள் தீர்ப்பை அளித்தனர். ஸ்திரத்தன்மை, நல்லாட்சி, வளர்ச்சி ஆகியவற்றுக்காக மக்கள் தீர்ப்பளித்தனர்.
மேலும், வலுவான பாரதத்தை உருவாக்குவதற்கான அவர்களது ஆவல், மக்களவைத் தேர்தல் முடிவுகளில் பிரதிபலித்தது.
எனவே, நாட்டை வளர்ச்சியின் உச்சத்துக்கு கொண்டுசெல்லும் பணியில் உங்களது ஆதரவையும், ஆசியையும், பங்களிப்பையும் எங்களுக்குத் தர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.
உங்களுடன் இணைந்து நாட்டின் ஒளிமயமான எதிர்காலத்தை படைக்கவிருக்கிறோம்.
மேலும், தன்னிறைவுபெற்ற, வலுவான, வளர்ச்சியடைந்த நாடாகவும், சர்வதேச அமைப்புகளின் ஒத்துழைப்போடு உலக அமைதி மற்றும் மேம்பாட்டுக்கு உழைக்கும் நாடாகவும் இந்தியா விளங்கவேண்டும் என உறுதி எடுக்கவேண்டும்
THINAPPUYAL NEWS