திரைப்பட விழாவில் பரதேசி படத்திற்கு 4 விருதுகள்

707

பாலாவின் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த படம் ‘பரதேசி’. இப்படத்தில் முரளியின் மகன் அதர்வா ஹீரோவாகவும், வேதிகா ஹீரோயினாகவும் நடித்திருந்தனர். வித்தியாசமான கதைக்களத்துடன், உண்மை சம்பவத்தை மையப்படுத்தி வெளிவந்த இப்படம் தமிழில் மட்டுமல்லாது இந்திய அளவிலும் பல்வேறு விருதுகளை வாங்கியுள்ளது.

இந்நிலையில், நார்வேயில் நடைபெற்ற தமிழ் திரைப்பட விழாவில் இந்த படத்துக்கு 4 விருதுகள் கிடைத்துள்ளது. சிறந்த படம், சிறந்த இயகஇ்கம், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த நடிகர் என விருதுகளை அள்ளிச் சென்றதில் படக்குழுவினர் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ‘விடியும் முன்’ படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விருது பூஜாவுக்கு கிடைத்துள்ளது.

SHARE