துணிச்சல் மிக்க மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் முள்ளிவாய்க்கால் மக்களுக்கு அஞ்சலி செலுத்தினார்

527
   jaffna_16_5_2014_2  jaffna_16_5_2014_3(3)
வடக்கு மாகாணசபையில் இன்று நடைபெறவிருந்த முள்ளிவாய்க்கல் நினைவேந்தல் நிகழ்வை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்

இறுதி யுத்தத்தின் போது உயிரிழந்த உறவுகளை நினைவு கூறும் முகமாக மாகாணசபை உறுப்பினர்களால் இன்று காலை 11 மணியளவில் வடக்கு மாகாண பேரவைச் செயலகத்தில் அஞ்சலி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வை தடுக்கும் முகமாக மாகாணசபை அமைந்துள்ள பிரதேசம் எங்கும் பெருமளவான பொலிஸாரும் ,புலனாய்வுதுறையினரும் குவிக்கப்பட்டிருந்தனர் அத்துடன் மாகாணசபை உறுப்பினர்களை சபைக் கட்டடத்துக்குள் உள்நுழைய விடாது பொலிஸார் தடுத்து நிறுத்தினர்.

இந்த நிலையில் மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் மற்றும் அனந்தி ஆகிய இருவரும் இணைந்து மாகாணசபை கட்டிடத் தொகுதி எல்லைக்கு வெளியில் தீபத்தினை ஏற்றி அஞ்சலி செலுத்த முற்பட்டனர்.

இதன்போது சிவாஜிலிங்கத்தல் ஏற்றப்பட்ட தீபத்தை சாவகச்சேரி பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி காலினால் தள்ளி வீழ்த்தி தீபத்தை அணைத்துவிட்டு இங்கு தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தமுடியாது என தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து மாகாண சபை உறுப்பினர்கள் இருவரும் அஞ்சலி உரையாற்றிவிட்டு குறித்த இடத்தை விட்டு வெளியேறினர்

jaffna_16_5_2014_3(2)jaffna_16_5_2014_1(2)

SHARE