தெரியுமா உங்களுக்கு?

669

வெள்ளி, சூரிய குடும்பத்தில் சூரியனிலிருந்து இரண்டாவதாக அமைந்துள்ள ஒரு கோளாகும். இரவு வானத்தில் நிலவுக்கு அடுத்து வெள்ளியே பிரகாசமானது. சூரிய உதயத்துக்கு முன்னும் சூரிய அஸ்தமனத்துக்கு பின்னும் வெள்ளி தன் உச்சப்பிரகாசத்தை அடைகிறது. இதனால் அது காலை நட்சத்திரம் மற்றும் மாலை நட்சத்திரம் என்று அழைக்கப்படுகிறது. சூரிய குடும்பத்திலேயே மிகவும் வெப்பமான வளிமண்டலத்தை கொண்ட கோள் வெள்ளியாகும்.

இது அதிகரித்த பச்சை வீட்டு விளைவால் ஏற்பட்டதாகும். இதன் சூழல் உயிரினங்கள் வாழ முடியாத நிலையை கொண்டுள்ளது. இது புவியை போல கற்கோளத்தை கொண்ட கோளாகும். இதன் திணிவும் ஆரை நீளமும் கிட்டதட்ட புவியினுடையதை ஒத்து போவதால் இக்கோளானது புவியின் தங்கை எனவும் அழைக்கப்படுகிறது. இதன் ஆரம் 12092 கீலோ மீட்டர் நீளத்தை கொண்டது. வெள்ளியின் மேற்பரப்பில் 80 சதவீதம் சமவெளியாய் உள்ளது.

சூரியன் பின்னோளி வீசும் போது இதன் பிரகாசம் 3 ஆக சுருங்குகிறது. இக்கோள் நடுப்பகலிலும் பார்ப்பதற்கு பிரகாசமாக இருப்பதுடன் சூரியனும் கீழ் வானில் இருக்கும் போது எளிதில் காணக்கூடியதாகவும் இருக்கிறது. இதன் சுற்றுப்பாதை சூரியனுக்கும் புவியின் சுற்றுப்பாதைக்கும் நடுவில் இருப்பதால் புவியில் இருந்து பார்க்கும்போது சூரியனின் நிலநடுக்கோட்டில் இருந்து 47 டிகிரி சாய்வு வரை அதிகமாக செல்வது போல் தோற்றம் அளிக்கிறது.

வெள்ளி கோள் பரப்பின் சூழல் தற்போது மனிதன் வாழும் சூழலை பெறவில்லை. ஆனால் வெள்ளி கோள் பரப்பில் இருந்து 50 கிலோ மீட்டர் மேல் உள்ள வளிமண்டலம் மனிதர் வாழ்வதற்கு ஏற்ற அடிப்படை வாயுக்களான நைட்ரஜனை பெற்றுள்ளது. அதனால் வெள்ளியின் வானில் மனிதர் மிதக்கும் நகரங்களை உருவாக்க வாய்ப்பு உள்ளது. காற்றினும் எடை குறைந்து மிதக்கும் நகரங்களை உருவாக்கி அதில் நிரந்தர குடியேற்றங்களை அமைக்க முடியும்.

SHARE