நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்வாரானால் அவரின் ஆட்சிக்கு ஆபத்து -ஜந்து கட்சிகள் விலக்க வேண்டும் என்கின்றன

530

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்யுமாறு ஐந்து இடதுசாரி கட்சிகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் கோர உள்ளன.

எனிவரும் காலங்களில் ஜனாதிபதி தேர்தல் நடத்தக் கூடாது.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்ய வேண்டும்.

நாடாளுமன்றிற்கு பொறுப்புச்சொல்லக் கூடிய பிரதமர் ஒருவரை நியமிக்க வேண்டும்.

இதற்காக பொதுத் தேர்தல்களை நடாத்த முடியும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் எழுத்து மூலம் இந்தக் கட்சிகள் கோரிக்கை விடுக்கப்படவுள்ளது.

ஸ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சி,  லங்கா சமசமாஜ கட்சி, ஜனநாயக இடதுசாரி கட்சி, ஸ்ரீலங்கா மக்கள் கட்சி மற்றும் தேச விடுதலை மக்கள் கட்சி ஆகியன கூட்டாக இணைந்து ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்க தீர்மானித்துள்ளன.

விரைவில் இந்தக் கோரிக்கை ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட உள்ளது.

SHARE