நைஜீரியாவில் பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இதுவரை 12 ஆயிரம் மக்கள் பலி

572

நைஜீரியாவில் பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இதுவரை 12 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டனர் என அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் அதிபர் கூட்டிய பிராந்திய பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறும் போது நைஜீரியாவின் ஒருமைப்பாட்டையும், ஸ்திரதன்மையையும் போஹா ஹரம் குறிவைத்துள்ளது. எனவே மேற்கு ஆப்ரிகாவில் அல்-கொய்தாவுக்கு பொருளாதார தடைகளை தொடர்ந்து விதிப்பது அவசியம் என சர்வதேச நாடுகளை கேட்டுக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.

SHARE