நோர்வே தூதரகத்திற்கு எதிரில்ஹெல உறுமய போராட்டம்

515

தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு தலைவர்களில் ஒருவராக கருதப்படும் பேரின்பநாயகம் எனப்படும் நெடிவணை கைது செய்யுமாறு கோரி ஜாதிக ஹெல உறுமய கட்சி நாளை, நோர்வே தூதரகத்திற்கு எதிரில் போராட்டமொன்றை நடாத்த உள்ளது.
நெடியவணை இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைக்குமாறு வலியுறுத்தி சுதந்திர சதுக்கத்திலிருந்து, நோர்வே தூதரகம் வரையில் ஜாதிக ஹெல உறுமய கட்சி உறுப்பினர்கள் நாளை பேரணியாக செல்லவுள்ளனர்.
நெடியவணை இலங்கையிடம் ஒப்படைக்குமாறு கோரி நோர்வே தூதரகத்திடம் மகஜர் ஒன்றையும் கையளிக்க உள்ளதாக ஜாதிக ஹெல உறுமய கட்சியின் ஊடகப் பேச்சாளர் நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பிற்பகல் 3.30 மணிக்கு யுத்த வெற்றிக் கொண்டாட்டங்களை முன்னிட்டு ஜாதிக ஹெல உறுமய விசேட கருத்தரங்கு ஒன்றை நடாத்த உள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் மீள தலைதூக்குவதனை தடுப்பதற்கும் யுத்த வெற்றியை தடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனற தொனிப்பொருளில் இந்த கருத்தரங்கு நடைபெறவுள்ளது.
இந்த கருத்தரங்களில் அமைச்சர் சம்பிக்க ரணவிக்க விசேட விரிவுரையொன்றை நிகழ்த உள்ளார்.

SHARE