பிரேசிலில் பிரசாரத்திற்கு சென்ற விமானம் விழுந்து நொறுங்கியது -வேட்பாளர் உள்பட 7 பேர் பலி

449
பிரேசிலில் ஏற்பட்ட விமான விபத்தில் ஜனாதிபதி வேட்பாளர் உள்பட 7 பேர் பலியாகியுள்ளனர்.வரும் அக்டோபர் மாதம் பிரேசிலில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.இந்த பிரசாரத்தில் பிரேசிலின் சோசலிஸ்ட் கட்சியின் சார்பில் வேட்பாளராக நியமிக்கப்பட்டிருந்த மாநில முன்னாள் ஆளுநர் எடுவர்டோ கேம்போசுவும் (Eduardo Campos) ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் ஆதரவாளர்களுடன் சிறிய விமானம் ஒன்றில் இவர் பிரசாரத்திற்கு சென்றபோது, எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டுள்ளது.

சாண்டோஸ் (Santos) என்னும் நகரில் ஏற்பட்ட இந்த விபத்தில் கேம்போசு, விமானி உள்பட விமானத்தில் பயணித்த 7 பேரும் பலியாகினர்.

மேலும் விமானம் அப்பகுதியில் உள்ள வீடுகளின் மேல் விழுந்ததால், சுமார் 10 வீடுகள் சேதமடைந்துள்ளன.

விமானம் விழுந்த பகுதியில் நின்றிருந்த 6 பேர் படுகாயமடைந்ததால், தற்போது அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விமானம் விபத்துக்குள் சிக்கியது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE