புலிகளைப் கூட்டமைப்பு போராட்டத்திற்கு தயார்படுத்துகிறது: குணதாச அமரசேகர :-

611

வடக்கில் உள்ள அனைவரும் புலிகளே. புனர்வாழ்வு வழங்கினாலும் புலித் தீவிரவாதிகளின் கொள்கையை அழிக்க முடியாது என்று குற்றம் சுமத்திய தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் வடக்கில் உள்ள அனைத்து புலிகளையும் கொன்று குவிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

வடக்கில் புலிகள் மீள உருவாகி வருவதாக அரசாங்க தரப்பில் தெரிவிக்கப்படும் குற்றச் சாட்டுக்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர மேற்கண்டவாறு தெரிவித்தார்.

விடுதலைப் புலி தீவிரவாதிகள் வடக்கில் முழுமையாக அழிக்கப்படவில்லை. குறைந்த அளவிலான தீவிரவாதிகளே கொல்லப்பட்டனர். எனினும் இன்னும் வடக்கில் புலிகள் வாழ்கின்றனர். அவர்களை பாதுகாத்து போராட்டத்திற்கு தயார்படுத்தும் செயலை தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்து வருகின்றது எனக் குறிப்பிட்டார்.

சம்பந்தன் சுமந்திரன் போன்றோர் சர்வதேச ரீதியில் தீவிரவாதிகளுக்கான ஆதரவினைத் தேடுவதுடன் வடக்கில் எஞ்சியுள்ள விடுதலைப் புலிகள் தீவிரவாதிகளை வலுப்படுத்தும் செயற்பாட்டையும் செய்து வருகின்றனர் என்றார்.

வடக்கில் வாழும் அனைவரும் விடுதலைப் புலிகளே. இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டு புனர்வாழ்வு வழங்கப்பட்டாலும் இவர்களின் கொள்கைகளையும் மன நிலையினையும் மாற்றியமைக்க முடியாது. தீவிரவாதிகள் எப்போதும் தீவிரவாதிகளாகவே வாழ்வார்கள். அதன் வெளிப்பாடே இன்று மீண்டும் தலைதூக்கியுள்ளது எனவும் தெரிவித்தார்.

சர்வதேச அமைப்புக்களுடன் கைகோர்த்து விடுதலைப் புலிகள் இன்று வடக்கை சீரழிக்க ஆரம்பித்து விட்டது. இதனை உடனடியாக கட்டுப்படுத்தி வடக்கு கிழக்கில் உருவாகி வரும் தீவிரவாதத்தை அழிக்க வேண்டும் என்றார்.

மீண்டும் வடக்கில் இராணுவ பாதுகாப்பினை அதிகரித்து விடுதலைப் புலி தீவிரவாதிகளை கொன்று அழிக்க வேண்டும். இல்லையேல் ஒருபோதும் பயங்கரவாதத்தை அழிக்க முடியாது எனவும் குறிப்பிட்டார்.

சர்வதேச பொலிஸார் விடுதலைப்புலி தீவிரவாதிகளை தேடுகின்றனர் என்பது சாதாரண விடயமல்ல. எனவே இவ் விடயத்தில் சர்வதேசத்தின் ஒத்துழைப்புடன் வடக்கில் உள்ள தீவிரவாதிகளையும் அவர்களுக்கு துணை போகும் அனைத்து உறுப்பினர்களையும் கைது செய்து கடுமையான தண்டனையினை நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

SHARE