போதைப்பொருள் கட்டுப்பாடு தொடர்பாக விரிவான தேசிய வேலைத்திட்டம் ஒன்றை அமுல்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இதன்பொருட்டு விசேட கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி தலைமையில் இன்று முற்பகல் இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலில், நியாயமான சமூகத்திற்கான மக்கள் இயக்கத்தின் இணைப்பாளர் மாதுலுவாவே சோபித்த தேரர், ஜாதிக்க ஹெல உறுமயவின் தலைவர் ஓமல்பே சோபித்த தேரர், நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலீயே ரத்தன தேரர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது கருத்து வெளியிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. நீண்ட காலமாக அரசாங்கத்தையும், பொதுமக்களையும் நெருக்கடிக்கு உள்ளாக்கிய போதைப்பொருள் பாவனை தொடர்பாக அரசாங்கம் கூடிய கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவித்தார்.
பாடசாலை மாணவர்களை முன்னிலைப்படுத்தி இந்த செயற்றிட்டத்தை முன்னெடுப்போம், இதற்கான ஆவணங்கள், அறிவித்தல்கள், சுற்றுநிரூபங்கள் தயாரிக்கப்படவுள்ளன.
மாவட்டங்கள் ரீதியாக இந்த செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படும், அதற்கு நானும் பங்கேற்பேன். அனைத்து தரப்பினரும், அரசியல் வாதிகளும் இந்த செயற்றிட்டத்தில் கலந்து கொள்ள முடியும். முக்கியமாக போதைப் பொருள் பயன்படுத்தாதவர்கள், இந்த செயற்றிட்டத்தில் பங்கேற்க வேண்டும்,
புகைத்தல் மற்றும் மதுபானங்களை பயன்படுத்தாதவர்களே இதில் கலந்து கொள்வது சிறப்பானதாகவும்.
அதேவேளை, இனி மதுபான சாலைகளுக்கான அனுமதி இனி வழங்கப்படமாமாட்டாது.