மிகப் பெரிய இராணுவ மருத்துவமனையை திறந்து வைக்கவுள்ளார் மகிந்த

677
இலங்கையில் மிகப்பெரிய மருத்துவமனையான 10 மாடிகளைக்  கொண்ட இராணுவ மருத்துவமனையை எதிர்வரும் திங்கட்கிழமை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச திறந்து வைக்கவுள்ளார்.

நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள இந்த இராணுவ மருத்துவமனை 6542.4 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மருத்துவமனையே இலங்கையில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனையாகும்.

இந்த இராணுவ மருத்துவமனை 1024 படுக்கைகளைக் கொண்டுள்ளது. அதேவேளை, சிறிலங்காவின் மிகப்பெரிய மருத்துவமனையாக விளங்கிய சிறிஜெயவர்த்தனபுர தேசிய மருத்துவமனை 1021 படுக்கைகளை மட்டுமே கொண்டதாகும்.

இந்த மருத்துவமனையில் இலங்கையின் முப்படையினர், அவர்களின் குடும்பத்தினர், போரில் உயிரிழந்த படையினரின் குடும்பத்தினர் மற்றும் முன்னாள் படையினருக்கு சிகிச்சை அளிக்கப்படும்.

20 விடுதிகளைக் கொண்ட இந்த இராணுவ மருத்துவமனையில், 9 சத்திரசிகிச்சைக் கூடங்களும், அனைத்து நவீன மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக் கூடங்களும், அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் இந்த மருத்துவமனையின் மேற்தளத்தில் உலங்குவானூர்தி இறங்கும் தளமும் அமைக்கப்பட்டுள்ளது.

 

SHARE