முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஜனாதிபதி  சந்திப்பு 

523

MR082110

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விசேட சந்திப்பு ஒன்றை நடாத்த உள்ளார். பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் சகல முஸ்லிம் உறுப்பினர்களுடனும் ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடாத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. வெசாக் பௌர்ணமி நிகழ்வுகளைத் தொடர்ந்து இந்த விசேட சந்திப்பு நடைபெறவுள்ளது.

முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கி வரும் நெருக்கடிகள் தொடர்பிலும் அதற்கான தீர்வுத் திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, அமைச்சர் ரிசாட் பதியூதீன் சந்தித்து சில விளக்கங்களை அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்திக்க திகதியொன்றை ஒதுக்குமாறு ஜனாதிபதி, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவிற்கு பணித்துள்ளார்.

தம்புள்ள பள்ளிவாசல் அகற்றப்பட உள்ளதாக அமைச்சர் பதியூதீன் தெரிவித்துள்ளார். எனினும், இவ்வாறான ஓர் விடயம் பற்றி தமக்கு எதுவும் தெரியாது என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். யுத்தத்தின் போது இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்களை மீள்குடியேற்ற திட்டமொன்றை வகுக்க வேண்டுமென அமைச்சர் ஜனாதிபதியிடம் கோரியுள்ளார்.

SHARE