மோடியை கைது செய்யவேண்டும்: தேர்தல் ஆணையத்திற்கு மம்தா வேண்டுகோள்

668
பா.ஜ.க பிரதமர் வேட்பாளரான மோடி வகுப்புவாத வன்முறையை தூண்டிவிட்டு அசாமில் கலவரத்தை உருவாக்கிவிட்டுள்ளதாகவும், அதே போல் மேற்கு வங்கத்திலும் மக்களிடம் மதம் மற்றும் சாதி வெறியை தூண்டி கலவரம் ஏற்படும் வகையில் பேசி வருகிறார்.

இவ்வாறு பேசி வரும் அவரை கைது செய்வதுடன், மேற்கு வங்கத்தில் நடைபெறும் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் இனி அவர் கலந்து கொள்ளவும் தடை விதிக்கவேண்டும் என மம்தா கேட்டுக்கொண்டுள்ளார். மேற்கு வங்கத்தில் உள்ள கிரிஷ் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மம்தா பேசும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் பேசியதாவது:

இந்து, முஸ்லிம், வங்காளி மற்றும் வங்காளி அல்லாதவர்கள் என அனைவரையும் நாங்கள் எங்கள் நெஞ்சங்களில் ஒன்றாகவே வைத்துள்ளோம். அவர்களில் ஒருவர் மீது மோடி கை வைத்தாலும் நாங்கள் டெல்லியை முற்றுகையிடுவோம்.

வகுப்புவாதத்தை வேர்விட வைக்கும் முயற்சிகளில் பா.ஜ.க ஈடுபட்டு வருகிறது. கலவரங்களை உருவாக்குபவர்கள் நாட்டின் தலைவராக முடியாது. அவரது கருத்துகளை கேட்டுத்தான் அசாமில் அப்பாவி சிறுபாண்மையினர் கொல்லப்பட்டுள்ளனர். நாட்டை வழி நடத்துபவர்களே கலவரத்தை உருவாக்க நினைத்தால் நாடு என்ன ஆகும் என்று நினைத்து பாருங்கள் என மம்தா பேசினார்.

SHARE