வவுனியா சிதம்பரபுரம் வீதியில்மூன்று கிளைமோர் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது./

601

வவுனியா சிதம்பரபுரம் வீதியில் உள்ள கல்வீரங்குளத்தில் மூன்று கிளைமோர் குண்டுகள் இன்று வியாழக்கிழமை மாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வவுனியா விசேட குற்றத் தடுப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:-

வவுனியா சிதம்பரபுரம் வீதியில் உள்ள கல்வீரங்குளத்தில் இருந்து வயல் நிலங்களுக்கு நீர் பாய்ச்சிக்கொண்டிருந்த விவசாயி ஒருவர் குளத்தின் உட்பகுதியில் உள்ள பாசிப்புதர்களுக்குள் கிளைமோர் குண்டுகள் இருப்பதைக் கண்டு வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கினார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா பொலிஸார் தேடுதல் நடத்தியதில் மூன்று கிளைமோர் குண்டுகளும் அதற்கான சார்ஜர்களும் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.

இரவு நேரம் ஆனதால் இப்பகுதியில் மேலும் குண்டுகள் இருக்கக் கூடும் எனக் கருதியும் அக் குளம் அமைந்துள்ள பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன் நாளை அக்குண்டுகள் மீட்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

SHARE