உருளைக்கிழங்கினால் ஏற்பட்ட விபரீதம் வவுனியா பொலிஸார் பக்கச் சார்பாக நடந்து கொள்கின்றனர், நகரசபை உத்தியோகத்தர்களை கைது செய்து தடுத்து வைத்துள்ளனர் என்று தெரிவித்து வவுனியா நகரசபையினர் காலவரையற்ற பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

404

 

வவுனியா பொலிஸார் பக்கச் சார்பாக நடந்து கொள்கின்றனர், நகரசபை உத்தியோகத்தர்களை கைது செய்து தடுத்து வைத்துள்ளனர் என்று தெரிவித்து வவுனியா நகரசபையினர் காலவரையற்ற பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:- நேற்று முன்தினம் வவுனியா நகரசபையின் சுகாதார பரிசோதகர் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் சந்தை அமைந்துள்ள நகரப் பகுதிகளில் நகரசபையின் அனுமதியின்றி வீதியோர வியாபாரத்தில் ஈடுபட்டவர்களை அகற்றியுள்ளனர்.

SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES

இதன் போது அப்பகுதியில் மரக்கறிகளை கொள்வனவு செய்த இளைஞன் ஒருவர் தனது கையடக்கத் தொலைபேசியில் அச்சம்பவங்களை படம்பிடித்துள்ளார். இதன் போது இருபகுதியினருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சுகாதாரப் பரிசோதகர்கள் குறித்த இளைஞனை நகரசபை வாகனத்தில் ஏற்றி வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.


இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் இருதரப்பு முறைப்பாட்டையும் பதிவு செய்த பின்னர் நகரசபையினரால் தாக்கப்பட்டிருந்த குறித்த இளைஞனை வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்ததுடன் தாக்குதல் நடத்தியமை மற்றும் இளைஞனை பிடித்து தமது வாகனத்தில் ஏற்றி கொண்டுவந்தமை தொடர்பில் நகரசபை உத்தியோகத்தர்கள் ஆறு பேரை கைதுசெய்து தடுத்து வைத்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 12 மணித்தியாலங்களின் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர். பொலிஸாரின் இச்செயற்பாட்டை கண்டித்தே நகரசபையினர் இப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


போராட்டத்தில் ஈடுபட்டோர் கடமையில் ஈடுபட்டிருந்த நகரசபை உத்தியோகத்தர்களை கடமையை செய்யவிடாது சட்டவிரோதமாக கைது செய்தமை, 12 மணித்தியாலங்களுக்கு மேலதிகமாக உணவு, நீரின்றி தடுத்து வைத்திருந்தமை, கடமைக்கு இடையூறு விளைவித்த நபர் மீது பொலிஸார் நடவடிக்கை எடுக்காது விடுவித்தமை, உத்தியோகத்தர்களை அச்சுறுத்தியமை மற்றும் அவமதித்தமை என தமக்கு அநீதிகள் இழைக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்து சுலோக அட்டைகளை ஏந்தியுள்ளனர். இதேவேளை, வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞன் இன்று வீடு திரும்பியுள்ளார்.

SHARE