வாய்ப்புகள் பறிபோன நிலையில் ஸ்ரேயாவுக்கு கைகொடுக்கும் சான்டல்வுட் 

473




வாய்ப்புகள் பறிபோன நிலையில் ஸ்ரேயாவுக்கு கைகொடுக்கிறது சான்டல்வுட் திரையுலகம். தமிழ், தெலுங்கில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தவர் ஸ்ரேயா. படுகவர்ச்சியான வேடங்களிலும் தூள் கிளப்பினார். இந்நிலையில் ஹன்சிகா, நயன்தாரா, திரிஷா போன்றவர்களின் போட்டியில் ஸ்ரேயாவுக்கு மார்க்கெட் டல்லடித்தது. இதையடுத்து இந்தியில் கவனம் செலுத்தினார். அங்கும் அவரது முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை.

நீண்ட நாட்களுக்குபிறகு பாலா இயக்கும் கரக்காட்டக்காரர்களின் வாழ்க்கை சரித்திர படத்தில் நடிக்க அழைப்பு வந்தது. ஆனால் திடீரென்று அந்த வாய்ப்பு கைநழுவி, வரலட்சுமிக்கு கைமாறியது. பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த ஸ்ரேயாவுக்கு கன்னடம் தமிழில் உருவான சந்திரா என்ற படத்தில் நடிக்க கடந்த ஆண்டு வாய்ப்பு கிடைத்தது.

பெரிதும் எதிர்பார்த்த அப்படம் அவருக்கு கைகொடுக்கவில்லை. இந்நிலையில் மீண்டும் சான்டல்வுட் படத்தில் நடிக்க ஸ்ரேயாவுக்கு வாய்ப்பு வந்திருக்கிறது. உபேந்திராவின் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஸ்ரேயாவிடம் கால்ஷீட் கேட்கப்பட்டிருக்கிறது. அதை ஏற்பது பற்றி இன்னும் ஸ்ரேயா சம்மதம் தெரிவிக்கவில்லை. சம்பளம் ஒத்துவந்தால் ஓகே சொல்லிவிடுவாராம்.

 

SHARE