வாரணம் ஆயிரம்.. சன் டிவியின் புது சீரியல்! ஹீரோ, ஹீரோயின் போட்டோ இதோ

112

 

முக்கிய டிவி சேனல்கள் அனைத்தும் தற்போது போட்டிபோட்டுக்கொண்டு புதுப்புது சீரியல்களாக ஒளிபரப்ப தொடங்கி இருக்கின்றன. சன் டிவியில் இந்த வாரத்தோடு அன்பே வா தொடர் நிறைவுக்கு வருகிறது.

அடுத்து சில புது சீரியல்களை சன் டிவி கொண்டு வர இருக்கிறது. அது பற்றிய தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.

வாரணம் ஆயிரம்
வாரணம் ஆயிரம் என்ற பெயரில் ஒரு புது சீரியல் வர இருக்கிறது. அதில் நியாஸ் ஹீரோவாகவும், ஸ்வாதி கொண்டே ஹீரோயினாகவும் நடிக்க இருக்கின்றனர்.

சூர்யா நடித்த ஹிட் பட பெயரில் இந்த சீரியல் இருப்பதால், காதல் கதையாக தான் இருக்குமா என ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.

SHARE