இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோதமான முறையில் மீன் பிடித்துகொண்டிருந்ததாக கூறி மேலுமொரு தொகுதி இந்திய மீனவர்கள் கைதாகியுள்ளனர்.அவ்வாறு நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து கைது செய்துள்ள 32 பேரையும்; அவர்களிடமிருந்து எட்டு படகுகளை கைப்பற்றியுள்ளதாகவும் இலங்கை அரசு அறிவித்துள்ளது.
ஏற்கனவே இந்திய மீனவர்கள் 42 பேரை தலைமன்னார் கடற்பரப்பில் நேற்று சனிக்கிழமை மாலை இலங்கை கடற்படையினர் கைது செய்திருந்தனர். தலைமன்னார் கடற்பரப்பினுள் 8 படகுகளில் மீன்பிடியில் ஈடுபட்ட 42 இந்திய மீனவர்களே கைதாகியிருந்தனர்.
கடந்த இரண்டு நாட்களினுள் மட்டும் அவ்வாறு 74 இந்திய மீனவர்கள் கைதாகியுள்ளனர்.