விமர்சித்தவர்களுக்கு பதிலடி: கம்பீர் பெருமிதம்

580
ஐ.பி.எல் கிண்ணத்தை கைப்பற்றியதற்கு வீரர்களின் கூட்டு முயற்சி தான் காரணம் என்று கொல்கத்தா அணித்தலைவர் கம்பீர் கூறியுள்ளார்.2012ம் ஆண்டு ஐ.பி.எல். கிண்ணத்தை வென்றிருந்த கொல்கத்தா அணி தற்போது பஞ்சாப்பை வீழ்த்தி 2வது முறையாக சாம்பியன் பட்டம் பெற்றது.டோனி தலைமையிலான சென்னை அணி தான் இதுவரை இரண்டு ஐ.பி.எல் கிண்ணத்தை வென்றிருந்தது. ஆனால் தற்போது அந்த வரிசையில் கொல்கத்தா அணி இணைந்து கொண்டது.

இந்த வெற்றி குறித்து கம்பீர் கூறுகையில், முதல் 7 ஆட்டத்தில் 5  தோல்வி பெற்றிருந்தோம். இதைத் தொடர்ந்து கொல்கத்தா அணியின் கதை முடிந்து விட்டது என்று சொல்லப்பட்டது.

ஆனால் தற்போது எங்களை விமர்சித்தவர்களுக்கு நாங்கள் சரியான பதிலடி கொடுத்து திறமையை நிரூபித்திருக்கிறோம். வீரர்களின் கூட்டு முயற்சியால் ஐ.பி.எல். கிண்ணத்தை 2வது முறையாக கைப்பற்றியுள்ளோம்.

நெருக்கடியில எங்கள் வீரர்கள் மிகவும் சிறப்பாக விளையாடினார்கள். மனிஷ் பாண்டேயின் ஆட்டம் மிகவும் அபாரமாக இருந்தது.

மேலும் யூசுப்பதான் தனக்குரிய பாணியில் நன்றாக ஆடினார். இதேபோல கடைசியில் வெற்றிக்கு பங்கு வகித்த பியூஸ் சாவ்லாவும் சிறப்பாக ஆடினார் என்று கூறியுள்ளார்.

SHARE