இலங்கை வீரர் செனநாயக்கே பந்து வீச தடை

508

 

சமீபத்தில் முடிந்த இங்கிலாந்து தொடரின் போது இலங்கை சுழற்பந்து வீச்சாளர் செனநாயக்கேவின் பந்து வீச்சு சர்ச்சையில் சிக்கியது. அவரது பந்து வீச்சு எறிவது போன்று இருப்பதாக நடுவர்கள் கூறிய புகாரை தொடர்ந்து, அவரது பந்து வீச்சு முறைகளை சிறப்பு நிபுணர்கள் மூலம் ஐ.சி.சி. பரிசோதனை செய்தது.

இதன் முடிவில் அவரது பவுலிங் விதிமுறைக்கு புறம்பாக இருப்பதாகவும், எனவே அவருக்கு சர்வதேச கிரிக்கெட்டில் பந்து வீச தடை விதிப்பதாகவும் ஐ.சி.சி. அறிவித்துள்ளது. பந்துவீச்சில் உள்ள சர்ச்சைகளை களைந்து மறுஒப்புதல் பெற்றால் மட்டுமே அவர் இனி பந்து வீச முடியும்.

SHARE