அகதிகளுக்காக பாடுபடும் ஜேர்மன் சான்சலர்: அமைதிக்கான நோபல் பரிசு வழங்க முடிவு

300
லட்சக்கணக்கான அகதிகளுக்கு ஜேர்மனி நாட்டின் கதவுகளை திறந்துவிட்டுள்ள சான்சலர் ஏஞ்சலா மெர்க்கலிற்கு நடப்பாண்டிற்கான நோபல் பரிசு கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.2015ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசை வழங்கும் பணிகள் நோர்வே நாட்டில் நாளை (திங்கள் கிழமை)முதல் நடைபெற உள்ளது.

இவ்வாண்டிற்கான நோபல் பரிசை பெறுவதற்காக ஜேர்மனியின் சான்சலரான ஏஞ்சிலா மெர்க்கல், அமெரிக்க வெளியுறவு துறை செயலாளரான ஜான் கெரி, கத்தோலிக்க மதகுருவான போன் பிரான்சிஸ், இரான் நாட்டு வெளியிறவு துறை செயலாளர் உள்ளிட்ட 276 நபர்களின் பெயர்கள் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜேர்மனியில் வெளியாகும் ‘பில்ட்’ என்ற பத்திரிகை நேற்று சிறப்பு செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், அகதிகளுக்கு புகலிடம் அளிப்பது தொடர்பான விடயங்களில் ஜேர்மனி நாடு பிற ஐரோப்பிய நாடுகளுக்கு ஒரு முன் மாதிரியாக விளங்கி வருகிறது.

ஐரோப்பிய நாடுகளிலேயே அதிக மக்கள் தொகை எண்ணிக்கை கொண்ட நாடுகளில் முதலாவதாக திகழும் ஜேர்மனி அரசு, புகலிடம் கோரி வரும் அகதிகளுக்கு மறுவாழ்வு ஏற்படுத்தி தருவதில் திறமையாக செயல்பட்டு வருகிறது.

ஐக்கிய நாடுகளின் சபையில் அகதிகளின் உண்மை நிலையை விளக்கியதுடன், அகதிகளுக்கு புகலிடம் கொடுப்பது தொடர்பான விடயத்தில் ஜேர்மனி அரசின் பங்கு குறித்து சான்சலர் ஏஞ்சிலா மெர்க்கல் திறம்பட எடுத்துக்காட்டியுள்ளார்.

மேலும், உக்ரைன் நாட்டு பிரச்சனைகள் தொடர்பான விடயத்திலும் ஏஞ்சலா மெர்க்கலின் பங்கு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

ஏஞ்சிலா மெர்க்கலின் மகத்தான இச்செயல்பாடுகள் அவருக்கு 2015ம் ஆண்டிற்குரிய அமைதிக்கான நோபல் பரிசை பெற்று தரும் என அந்த பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

நோர்வே தலைநகரான ஓஸ்லோவில் உள்ள நோபல் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனரான Kristian Berg Harpviken என்பவரும் ‘ஏஞ்சிலா மெர்க்கலிற்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்க வாய்ப்புள்ளது’ என கருத்து தெரிவித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நோபல் பரிசு பெறுவதற்கு 276 நபர்கள் பட்டியலில் உள்ள நிலையில், இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதிர்வரும் அக்டோபர் 9ம் திகதி வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE