அக்காவை தோற்கடித்து அரையிறுதிக்குள் நுழைந்த தங்கை செரீனா

711
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதிக்குள் நுழைந்துள்ளார் செரீனா வில்லியம்ஸ்.கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

இப்போட்டியின் காலிறுதியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் சகோதரிகளான செரீனா மற்றும் வீனஸ் வில்லியம்ஸ் மோதினர்.

இதன் முதல்செட்டை 6–2 என்ற கணக்கில் செரீனாவும், 2-வது செட்டை 6-1 என்ற கணக்கில் வீனசும் வென்றனர்.

இந்நிலையில் 3-வது செட்டை 6-3 என்ற கணக்கில் செரீனா வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

மற்றொரு காலிறுதி போட்டியில் இத்தாலியை சேர்ந்த ராபர்ட்டா வின்சி 6–3, 5–7, 6–4 என்ற கணக்கில் கிறிஸ்டியானாவை (பிரான்ஸ்) வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

SHARE