அடிபட்டகாயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

517

60 வயது மதிக்கதக்க வெள்ளை நிற சேட்டும் வெள்ளை நிற வேட்டியும் அணிந்திருந்த நிலையில் இவருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளது. இச்சடலம் தலைப்பகுதியில் அடிபட்டகாயங்களுடன் உடல் பகுதியில் அங்கங்கே சிறு காயங்களுடன் காணப்படுகிறது.

வவுனியா மாவட்டத்தில் அரசங்குளம் பகுதியில் புகையிரத பாதையோரமாக ஆண் ஒருவரின் சடலம் அடிபட்டகாயங்களுடன் இன்று காலை (03.06) மீட்கப்பட்டுள்ளது.

புகையிரதத்தில் பயணிக்கும் பொழுது தவறி விழுந்திருக்கலாம் அல்லது யாராவது தள்ளி விழுத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்பகிறது இன்று அதிகாலை குறித்த பிரதேசத்தின் பிரதேசவாசி மாடு மேய்ப்பதற்காக சென்றிருந்த வேளை அடையாளம் காணப்பட்டு பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டது.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற புகையிரதத்தில் பயணித்த பயணியாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மேலதிக விசாரணையை ஓமந்தை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.



SHARE