அட்டன் நகரில் திருமண மண்டபம் ஒன்றில் திருமண சடங்கில் கலந்து கொண்ட இரண்டு குழுக்களுக்கிடையில் 27.01.2016 அன்று இடம்பெற்ற மோதலில் 7 பேர் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
மஸ்கெலியா மற்றும் தலவாக்கலை வட்டகொடை பிரதேசத்தை சேர்ந்த இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்தர்க்கம் சண்டையில் முடிந்தது. இது தொடர்பாக அட்டன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சம்பவத்தை அறிந்து நேரில் சென்று சந்தேகத்தின் பேரில் 7 பேரை கைது செய்து விசாரணைக்குட்படுத்தி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளார்.
எனினும் 28.01.2016 அன்று காலை அட்டன் நீதிமன்றத்தின் முன்னிலையில் ஆஜர்செய்த போது நீதவான் இவர்களை கடும் எச்சரிக்கை விடுத்து விடுதலை செய்துள்ளார்.