அதிகாரிகளுக்கு புத்தாண்டு பரிசாக ரஷ்ய ஜனாதிபதியின் கருத்துக்கள் அடங்கிய புத்தகம்

323
ரஷ்யா அரசு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி புடின் எழுதிய புத்தகத்தை புத்தாண்டு பரிசாக வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடின் தாம் இதுவரை பேசிய கருத்துக்கள் அடங்கிய 400 பக்க புத்தகத்தை அரசு அதிகாரிகளுக்கு புத்தாண்டு பரிசாக வழங்கியுள்ளார். ஜனாதிபதி மாளிகையால் தெரிவு செய்யப்பட்டுள்ள அரசு அதிகாரிகள் ஆயிரம் பேருக்கு இந்த 400 பக்க புத்தகம் வழங்கப்பட்டுள்ளது.புத்தகத்தை பெற்றுக்கொள்ளும் அதிகாரிகள் அதை முழுமையாக வாசிக்கவும், அந்த புத்தகத்தை அலுவலகத்தில் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 12 ஆண்டுகளாக புடின் ஆற்றிய உரைகளில் இருந்து முக்கிய பகுதிகளை இந்த சிறப்பு புத்தகத்திற்காக தொகுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமது மனைவியின் கருத்துக்களை ஐரோப்பிய தலைவர்கள் கேட்டிருந்தால் தற்போது ஏற்பட்டிருக்கும் அகதிகள் பிரச்சனைகள் இருந்திருக்காது என அந்த புத்தகத்தில் புடின் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே புடின் வழங்கியுள்ள இந்த புத்தாண்டு சிறப்பு புத்தகம் குறித்து வரலாற்று ஆய்வாளரும், ரஷ்யாவின் மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவருமான Nikolai Svanidze, சர்வாதிகாரி ஸ்டாலினை விடவும் ஒரு படி மேலே புடின் சென்றுள்ளதாக விமர்சித்துள்ளார். மேலும் புடினின் இந்த புத்தகத்தை மாவோவின் புத்தகத்திற்கு இணையாக பேசப்படுவது ஒருக்காலும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் Nikolai தெரிவித்துள்ளார்.

ஆனால் புத்தகத்தை தொகுத்துள்ள ஆசிரியர்களில் ஒருவர், புத்தகம் குறித்து எழுந்துள்ள அனைத்து விமர்சன்ங்களையும் மறுப்பு தெரிவித்துள்ளதுடன், புடின் கூறியுள்ள கருத்துகள் அனைத்தும் சமகாலத்தில் நிகழ்ந்து வருவதாகவும் அந்த தொகுப்பாசிரியர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE