அதிக விலைக்கு யுவராஜ் சிங்கை வாங்கியது ஏன்?

344
நடப்பு ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளுக்காக டெல்லி அணி சார்பில் யுவராஜ் சிங், 16 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டார்..

எனினும் இந்த சீசனில் இதுவரை 12 லீக் போட்டிகளில் விளையாடியுள்ள யுவராஜ் சிங் 205 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதில் ஒரே ஒரு அரைசதம் மட்டுமே அடங்கும். இதனால் 16 கோடி ரூபாய் ஏலம் போன அவர் சரியாக விளையாடவில்லை என்ற விமர்சனம் எழுந்தது.

இதற்கு பதில் அளித்த யுவராஜ் சிங் எனக்கு கோடிகள் முக்கியமல்ல. கிரிக்கெட்டுதான் முக்கியம். குறைந்த விலைக்கு ஏலம் எடுத்திருந்தாலும் நான் விளையாடுவேன். யாரிடமும் என்னை அதிக விலைக்கு வாங்குங்கள் நான் கேட்கவில்லை என்றார்.

இந்நிலையில் யுவராஜ் சிங்கின் கருத்தை டெல்லி அணியின் தலைமை நிர்வாகி அதிகாரி ஹேமந்த் டுவாவும் ஏற்றுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து ஹேமந்த் கருத்து வெளியிடுகையில்,

‘‘யுவராஜ் சிங்குக்கு 16 கோடி ரூபாய் என்று நாம் பேசிக்கொண்டிருக்கிறோம் என்று நான் நினைக்கிறேன். ஆனால் அது எல்லாம் ஐ.பி.எல். மார்க்கெட் இடத்தில் நடந்தவையாகும். விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற நிருபர்கள் சந்திப்பில் யுவராஜ் சிங், தான் யாரிடமும் இவ்வளவு விலை கொடுத்து என்னை ஏலத்தில் எடுங்கள் என்று நான் கேட்டகவில்லை என்று சரியாக சொல்லியிருக்கிறார்.

இது ஐ.பி.எல். மார்க்கெட்டில் நடைபெற்றவை. உரிமையாளராக இருந்து கொண்டு நாங்கள் 16 கோடி ரூபாய்க்கு வாங்க விரும்பினோமா?. இல்லை. ஒரு அணியின் உரிமையாளராக நான் குறைந்த விலைக்கு வாங்கவே விரும்பினேன். அங்க மற்ற அணி உரிமையாளர்களும் ஏலத்தில் இருந்ததால் அவர்கள் விலையை அதிகரிக்க விரும்பினார்கள். அதனால்தான் நான் சொல்கிறேன் இது மார்க்கெட்டில் தீர்மானிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

SHARE