அநுராதபுர யுகத்தின் சத்தாதிஸ்ஸ மன்னனின் மகன் லஞ்சதீச மன்னனால் 1500 வருடங்களுக்கு முன்னர் புதைக்கப்பட்ட செங்கல் பெட்டகம்,

314

 

அநுராதபுர யுகத்தின் சத்தாதிஸ்ஸ மன்னனின் மகன் லஞ்சதீச மன்னனால் 1500 வருடங்களுக்கு முன்னர் புதைக்கப்பட்ட செங்கல் பெட்டகம், புராதன பொருட்கள் அம்பாறை, ரஜகல தென்னவில் தோண்டியெடுப்பு

அம்­பாறை, புரா­தன ரஜ­க­ல­தென்ன பகு­தியில் மேற்­கொள்­ளப்­பட்ட அகழ்­வா­ராய்ச்­சியின் போது சுமார் 1500 வரு­டங்கள் பழைமை வாய்ந்­த­தாக கரு­தப்­படும் சங்கு உட்­பட பல புரா­தன பொருட்கள்  கண்­டெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.

 

 

இதன்­போது சங்கு, கல்­வெட்டு ஒன்றின் பகுதி, வழி­காட்டல் குறி என்­பன கண்­டெ­டுக்­கப்­பட்­ட­தாக ஜய­வர்­த­ன­புர பல்­க­லைக்­க­ழ­கத்தின் வர­லாறு மற்றும் தொல்­பொ­ரு­ளியல் பிரிவின் பேரா­சி­ரியர் கரு­ணா­சேன ஹெட்­டி­யா­ராச்சி தெரி­வித்தார்.

 

 

புத்தர் சிலை  காணப்­பட்ட இடத்­துக்கு கீழாக அமைக்­கப்­பட்­டி­ருந்த  செங்கல் பெட்­டகம் ஒன்­றி­லி­ருந்து   இப்­பு­ரா­தன சங்கு பாது­காக்­கப்­பட்­டி­ருந்­த­தாக பேரா­சி­ரியர் ஹெட்­டி­யா­ராச்சி தெரி­வித்­தி­ருந்தார்.

 

 

அநு­ரா­த­புர யுகத்தின் சத்­தா­திஸ்ஸ மன்­னனின் மக­னான லஞ்­ச­தீச மன்­னனால் இவை புதைக்­கப்­பட்­ட­தாக  வர­லாற்று குறிப்­பு­க­ளிலும் ரஜ­க­ல­தென்ன புனித பூமியில் காணப்­படும் தக­வல்­க­ளிலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தாக ஜய­வர்­த­ன­புர பல்­க­லைக்­க­ழ­கத்தின் வர­லாறு மற்றும் தொல்­பொ­ரு­ளியல் துறை பேரா­சி­ரியர் பத்­ம­சிறி கன்­னங்­கர தெரி­விக்­கின்றார்.

 

 

 

 

இந்த அகழ்­வா­ராய்ச்­சி­களின் போது கலா­நிதி அலெக்­ஸாண்டர் கபு­கொ­டுவ, சிரேஷ்ட விரி­வு­ரை­யாளர் தம்பர அமில தேரர், கிழக்கு மாகாண தொல் பொருள் பணிப்பாளர் நில்மல்கொட, பக்கிஎல்ல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜயலத் சுரவீர ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்.

 

SHARE