அந்தரங்க புகைப்படங்கள் சேகரித்த மகப்பேறு மருத்துவர்: பெண் நோயாளிகள் புகார்

283

 

ஜேர்மனியின் Dortmund பகுதியில் மகப்பேறு மருத்துவர் ஒருவர் பெண் நோயாளிகளின் அந்தரங்க புகைப்படங்களை சேகரிப்பதாக எழுந்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஜேர்மனியின் Dortmund பகுதியில் வசித்து வரும் 55 வயது மகப்பேறு மருத்துவரான ரால்ஃப், தனது பெண் நோயாளிகளின் அந்தரங்க புகைப்படங்களை சேகரித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

தன்னிடம் மருத்துவ ஆலோசனைக்காக வரும் பெண் நோயாளிகளை அவர்கள் கண்டு பிடிக்காதவாறு ரகசிய கெமராக்களை பயன்படுத்தி தொடர்ந்து புகைப்படம் எடுத்து வந்துள்ளார்.

சில பெண் நோயாளிகளிடம் மருத்துவ சோதனை எனும் பெயரில் தவறான கண்ணோட்டத்துடன் நடந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது.

மருத்துவர் ரால்ஃபின் அத்துமீறல் குறித்து பல பெண்களும் தற்போது வெளிப்படையாக புகார் தெரிவிக்கவும் சாட்சியம் அளிக்கவும் முன் வந்துள்ளனர்.

கடந்த 2012 ஆம் ஆண்டு மருத்துவர் ரால்ஃபின் மருத்துவமனையில் பரிசோதனைக்காக வந்த நோயாளி ஒருவரின் பணியாளர், அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த கமெரா குறித்து அச்சமடைந்து புகார் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அந்த மருத்துவமனையை சோதனையிட்ட பொலிசார், அங்கிருந்து கணினி, ரகசிய கமெராக்கள் மற்றும் பல்வேறு பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.

அதில் பதிவாகியிருந்த வீடியோ காட்சிகளை மதிப்பாய்வு செய்வதற்கே அதிகாரிகளுக்கு பல மாதங்கள் தேவைப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு மருத்துவர் ரால்ஃப் மீது வழக்கு பதிந்து நீதிமன்ற உத்தரவின் படி அவரை கைது செய்துள்ளனர்.

பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளில் ரால்ஃப் மீது வழக்கு பதிந்துள்ள நிலையில் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

SHARE