அபுதாபியில் முதல் முறையாக கோவில்: ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பிரதமர் மோடி நன்றி

306
அபுதாபியில் முதல் முறையாக கோவில் கட்டுவதற்கு நிலம் வழங்க முடிவு செய்துள்ளது ஐக்கிய அரபு.

இரண்டு நாள் சுற்றுப்பயணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார். இந்நிலையில் அவர் வருகையையோட்டி அபுதாபியில் கோவில் கட்டுவதற்கு நிலம் வழங்க அமீரக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். மேலும் இது தனிச் சிறப்புமிக்க ஒரு முடிவு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கோவில் கட்டுவதற்கு நிலம் வழங்க முடிவு செய்யப்பட்டிருப்பதன் மூலம் அங்கு வாழ்ந்து வரும் இந்தியர்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறியிருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் விகாஸ் சுவரூப் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அமீரக நாடுகளின் மக்கள்தொகையில் 30 சதவீதம் அளவுக்கு இந்தியர்கள் இருக்கிறார்கள். கிட்டதட்ட 2.6 மில்லியன் இந்தியர்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

SHARE