அமெரிக்காவில் உள்ள திரையரங்கம் ஒன்றில் குண்டுகள் வெடித்த விவகாரத்தில் வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

554

 

அமெரிக்காவில் உள்ள திரையரங்கம் ஒன்றில் பாட்டில் குண்டுகள் வெடித்த விவகாரத்தில் வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள திரையரங்கம் ஒன்றில் கடந்த 24ம் திகதி பாட்டில் குண்டு வெடித்துள்ளது.

ஆனால் இச்சம்பவத்தில் உயிர்சேதம் இல்லை என்றும் யாரும் காயம் அடையவில்லை எனவும் திரையிரங்கு உரிமையாளர்களால் கூறப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக விசாரணை நடத்திய பொலிசார், ஜாய்னெர்(20) என்ற வாலிபன் இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதை கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து இவர் மீது வெடிகுண்டு தயாரித்தல், வைத்திருந்தல் மற்றும் வெடிக்க செய்தல் போன்ற குற்றச்சாட்டுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் விர்ஜினியாவில் 2 வாரங்களுக்கு முன்னர் 2000த்திற்கும் அதிகமான மக்கள் இருந்த திரையரங்கம் ஒன்றில் இரண்டு பாட்டில் குண்டுகள் வெடித்தில் யாரும் காயமடையாதது குறிப்படத்தக்கது.

SHARE