அமெரிக்காவில் சோதனைக் குழாய் மூலம் பிறந்த நாய்க்குட்டிகள்

316

 

உலகிலேயே முதன் முறையாக அமெரிக்காவில் சோதனைக் குழாய் முறையில் நாய்க்குட்டிகள் பிறந்துள்ளன.

அமெரிக்காவின் கார்னெல் பல்கலைகழக கால்நடை மருத்துவ துறையை சேர்ந்த விஞ்ஞானிகள் இணைந்து சோதனைக் குழாய் முறையில் இவற்றை உருவாக்கியுள்ளனர்.

கடந்த ஜீலை மாதம் பிறந்த இந்த நாய்க்குட்டிகள் ஏழும் வெவ்வேறு இனம் மற்றும் கலப்பின வகையை சேர்ந்ததாகும்.

இதன் மூலம் அரிய வகை நாய்களை பாதுகாப்பதற்கும், மனிதர்கள் மற்றும் விலங்கினங்களின் நோய்களுக்கு சிகிச்சை அளிக்கவும் முடியும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நாய்களை உருவாக்கியிருப்பதே அமெரிக்க விஞ்ஞானிகளின் சாதனை என Public Library Of Science One என்ற இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE