அமெரிக்காவில் பயங்கர காட்டு தீ: 3000 ஏக்கர் எரிந்து சாம்பல்

337
அமெரிக்காவின் வாஷிங்டனில் ஏற்பட்டுள்ள காட்டு தீயில் 3000 ஏக்கர் நிலம் மற்றும் பல்வேறு வீடுகள் எரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டனின் கிழக்கு பகுதியில் மழை பெய்யாததால் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது

மேலும் ஆறுகளில் உள்ள நீரின் அளவும் குறைந்துகொண்டே வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அங்குள்ள சிட்டில் நகருக்கு 140 கிலோமீற்றர் கிழக்கில் உள்ள மலையில் தீடிரென காட்டுத்தீ ஏற்பட்டது. காற்று வேகமாக அடித்ததையடுத்து தீ வேகமாக பரவதொடங்கியது.

இதனால் 3000 ஏக்கர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 20க்கும் மேற்பட்ட வீடுகளும் எரிந்து சாம்பலானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று அப்பகுதியில் மழை பெய்ததால் ஓரளவு தீ பரவல் கட்டுக்குள் வந்துள்ளது.

எனினும் காட்டுத்தீயின் காரணமாக ஏற்பட்டுள்ள வெப்ப நிலையால் மீட்பு நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காட்டுத்தீ ஏற்பட்டதற்கான காரணத்தை கண்டுபிடிப்பதற்கு மீட்டு படையினர் முயற்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக அங்குள்ளவர்கள் வீடுகளில் இருந்து வெளியேறி வருகின்றனர்.

SHARE